அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுகிறாரா இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய அமெரிக்கரான நிக்கி ஹேலி அறிவித்துள்ளார்.
இந்திய அமெரிக்கரான நிக்கி ஹேலி
இந்திய அமெரிக்கரான நிக்கி ஹேலி Twitter

குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவோருக்கான தேர்தலில் 15 மாகாணங்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அமெரிக்கரான நிக்கி ஹேலி, குடியரசு கட்சி சார்பில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், போட்டியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “மக்களின் குரல் கேட்கப்படவேண்டும் என நான் விரும்பினேன். அதை எப்போதும் செய்வேன். போட்டியிலிருந்து விலகினாலும் மக்களுக்காக எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி அவர் களமிறங்கினால், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக களம் காண்பார்.

இந்திய அமெரிக்கரான நிக்கி ஹேலி
சில மணி நேரத்தில் ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர் பெர்க்.. இதுதான் காரணமா?

முன்னதாக அமெரிக்காவில், ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

இந்திய அமெரிக்கரான நிக்கி ஹேலி
வாஷிங்டனில் ட்ரம்ப் தோல்வி: முதல் வெற்றிபெற்ற ‘சதுப்பு நிலத்தின் ராணி’.. யார் இந்த நிக்கி ஹாலே?

இந்நிலையில், அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்குச் சதவிகிதம் படைத்த நபரே, அந்நாட்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் ஜனநாயக கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவியது.

ஏற்கெனவே அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருந்து வந்தது. எனினும் போட்டியில் இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலேவும் தனது பிரசாரத்தை மேற்கொண்டு அதில் சில இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தார். ஆனால் தற்போது அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com