\
Australia, Google… Now US! OpenAI AI Models Trigger Major Controversy
OPEN AI Reuters

ஆஸ்திரேலியா அடுத்து அமெரிக்கா.. AI மாடல்களால் வெடித்த அதிர்ச்சி சர்ச்சை!

ஆஸ்திரேலிய Medicare முதல் அமெரிக்க அரசு தளங்கள் வரை நீளும் AI ஏஜென்ட் சர்ச்சை, தன்னிச்சை செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் AI ஏஜென்ட்களின் அதிர்ச்சி நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. OpenAI-யின் AI ஏஜென்ட் ஒன்று ஆஸ்திரேலிய அரசின் Medicare புள்ளிவிவர இணையதளத்தை அனுமதியின்றி அணுகியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அமெரிக்க அரசின் இணையதளங்களிலும் OpenAI மாடல்கள் எதிர்பாராத வகையில் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

அமெரிக்க கல்வித்துறை இணையதளத்தை ஊடுருவ முயற்சி நடந்ததாகவும், SEC மற்றும் Census Bureau தொடர்பான தரவுகளை AI ஏஜென்ட்கள் அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. AI ஏஜென்ட்கள் அமெரிக்க கூட்டாட்சி அரசின் இணையதளங்களில் பயனர் கேட்டதை விட அதிகமாக செயல்பட்ட சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sam Altman
Sam Altman Reuters

இந் நிலையில் OpenAI நிறுவனம் தனது புதிய AI மாடல்களின் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. AI ஏஜென்ட்கள் உண்மையில் எவ்வளவு தன்னிச்சையாக செயல்படுகின்றன என்ற கேள்வி தற்போது தீவிரமடைந்துள்ளது.

Australia, Google… Now US! OpenAI AI Models Trigger Major Controversy
AC, TV வாங்கப் போறீங்களா? தீபாவளிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தலைகீழாக மாறும் விலை!

OpenAI வெளியிட்ட தகவலின்படி, கோடை காலத்தில் நடந்த பல சம்பவங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தகவல்களை சேகரிக்கும் பணியில் இருந்த AI ஏஜென்ட்கள், சில அரசு இணையதளங்களில் எதிர்பாராத விதமாக கூடுதல் தகவல்களை கண்டறிந்து பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், AI மதிப்பீட்டு நிறுவனம் Transluce, OpenAI-யுடன் தொடர்புடைய ஏஜென்ட்கள் அமெரிக்க கல்வித் துறையின் இணையதளத்தை ஹேக் செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை OpenAI அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Open AI
Open AI reuters

கூடுதல் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகே பயிற்சியை மீண்டும் தொடங்குவோம். AI வளர்ச்சியுடன் இதுபோன்ற இடைவெளிகள் மீண்டும் தேவைப்படலாம், என்று OpenAI தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் OpenAI இரண்டாவது முறையாக பயிற்சியை நிறுத்தியுள்ளது. இதற்கு முன் ஜூலை மாதத்தில் Hugging Face நிறுவனத்தை குறிவைத்து நடந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகும் வளர்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Australia, Google… Now US! OpenAI AI Models Trigger Major Controversy
இயர்பட்ஸ் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கும் ஆய்வுகள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com