\
Buying an AC or TV? Get ready for a price shock this Diwali!
AcReuters

AC, TV வாங்கப் போறீங்களா? தீபாவளிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தலைகீழாக மாறும் விலை!

புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைக் காலம் வரிசைகட்டத் தொடங்கியுள்ளது. இதனால் பலரும் ஆஃபர்களை எதிர்பார்த்து, வீட்டுக்குத் தேவையான புதிய AC, TV, Fridge உள்ளிட்ட பொருட்களை வாங்கத் திட்டமிடுவார்கள். ஆனால், புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் காரணமாக, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலக நாடுகளிடையே பெரும் தாக்கம் ஏற்பட்டதுடன், இந்தியாவும் பாதிப்பை சந்தித்தது.

fridge
fridgereuters

ஒருபுறம் உலக நாடுகளிடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மறுபுறம் புயல், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களும் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.

இதன் காரணமாக, எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்திச் செலவு, மூலப்பொருட்களின் விலை, சரக்குக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நுகர்வோர் சாதனங்களின் விலையை நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AC தயாரிப்பில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் Copper, Steel, Aluminium, Plastic உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, சரக்குக் கட்டண அதிகரிப்பு ஆகியவை உற்பத்திச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சீனா மற்றும் தைவானில் இருந்து வரும் சில உதிரிபாகங்களின் விநியோகமும் புயல்கள் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இனி புதிதாக AC அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கச் சென்றால், முன்பைவிட கூடுதல் பணம் செலவாகலாம். காரணம் Air Conditioner, LED TV, Washing Machine, Refrigerator உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் விலை அக்டோபர் 1 முதல் உயர வாய்ப்புள்ளதாகத் தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ac
acreuters

குறிப்பாக, AC-களின் விலை சுமார் 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நிறுவனங்கள் TV, Washing Machine, Refrigerator உள்ளிட்ட பொருட்களின் விலையையும் சுமார் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் முக்கியமாக, Blue Star நிறுவனம் ஏற்கனவே AC மற்றும் Deep Freezer விலைகளை சுமார் 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அதேபோல், Daikin நிறுவனம் செப்டம்பர் 16 முதல் AC விலையை சுமார் 8 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. Haier நிறுவனமும் அக்டோபர் 1 முதல் Room AC விலையை சுமார் 5 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சில நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையை அதிகரிக்க விலை ஏற்றத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Buying an AC or TV? Get ready for a price shock this Diwali!
கொட்டித் தீர்த்த கனமழை.! தத்தளிக்கும் உத்தரப்பிரதேசம்! 56 பேர் உயிரிழப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com