‘அதிக உடற்பயிற்சி‘- வெடித்துச் சிதறிய ரோயிங் மிஷின்

‘அதிக உடற்பயிற்சி‘- வெடித்துச் சிதறிய ரோயிங் மிஷின்
‘அதிக உடற்பயிற்சி‘- வெடித்துச் சிதறிய ரோயிங் மிஷின்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜிம் ஒன்றில் ரோயிங் மிஷினில் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும்போது அது வெடித்து சிதறி உள்ளிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஜிம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிகளில் ஒன்று “ரோயிங் மிஷின் உடற்பயிற்சி”. ரோயிங் என்றால் படகோட்டுதல். துடுப்புகளைப் பயன்படுத்தி படகோட்டிச் செல்வது போல கைகளை அசைப்பதே இந்த உடற்பயிற்சி. சிறந்த உடல் பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முதுகு, கைகள், தோள்கள், கால்கள், வயிற்றுப் பகுதிகள் உட்பட பல தசைகளை செயல்படுத்துகிறது. இந்த உடற்பயிற்சியை அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஒருவர் செய்து கொண்டிருந்தார். 4 முறை பயிற்சியை செய்துவிட்டு 5வது முறை செய்ய முற்படும்போது ரோயிங் மிஷின் வெடித்துச் சிதறியது. உள்ளே குளிர்விக்க வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பயிற்சி மேற்கொண்டிருந்தவர் மீது பீய்ச்சியடிக்க அவர் அதிர்ச்சியடைந்தார்.

அருகில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சிலரும் இந்த மிஷின் வெடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவரை பயிற்சியாளர்கள் மிஷினில் இருந்து கூட்டிச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதிக வேகத்தில் இழுத்ததால் அல்லது தொடர்ந்து மிஷினில் உடற்பயிற்சி செய்வதால் அந்த மிஷின் வெடித்து இருக்கக் கூடும் என தகவல்கள வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com