\
$2 Trillion at Risk Irans Secret Plan Puts US in Trouble
Masoud Pezeshkian & Mohsen Rezaei reuters

ஆபத்தில் $2 டிரில்லியன் சொத்துகள்.. ஈரான் போட்ட Secret Plan.. அமெரிக்காவுக்குச் சிக்கல்!

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) பல்வேறு பகுதிகளில் இருந்து ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டு உள்ளதால், எண்ணெய்ப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஈரான், கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

hormuz
hormuzreuters

இந்த நிபந்தனைகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்ற நிபந்தனைகள் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை என்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது போர் தொடுத்தால், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கத் தொடர்புடைய பல தொழில்நுட்பக் கட்டமைப்புகள் அழிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் டேட்டா சென்டர்கள், செயற்கை நுண்ணறிவு மையங்கள், கடலுக்கு அடியில் செல்லும் தகவல் தொடர்பு கேபிள்கள் ஆகியவை இலக்குகளாக மாறலாம் என்று எச்சரித்துள்ளார்.

iran army
iran armyreuters

இந்தக் கட்டமைப்புகள் அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், அவற்றின் மதிப்பு 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த மதிப்பீடு எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதற்கான விரிவான விவரங்களையோ, தாக்கப்படக்கூடிய குறிப்பிட்ட இடங்களின் பட்டியலையோ அவர் வெளியிடவில்லை.

$2 Trillion at Risk Irans Secret Plan Puts US in Trouble
ஈரான் போர்| 10 கோடி பேரல் எண்ணெய்.. மிரட்டிய ட்ரம்ப்.. பணிந்த ஐரோப்பா?

முந்தைய மோதலின்போது ஈரான் தனது ராணுவத்தின் முழுத் திறனையும் வெளிப்படுத்தவில்லை என்றும், மீண்டும் போர் ஏற்பட்டால் இன்னும் விரிவான திட்டத்துடன் எதிரிகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையதள கேபிள்கள் மற்றும் டேட்டா சென்டர்கள் பாதிக்கப்பட்டால், இணையச் சேவைகள், நிறுவனங்களின் கணினிச் செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவு சேவைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ballistic missile
ballistic missile Reuters

இதற்கிடையில், ஈரான் பெரிய அளவிலான ஏவுகணைப் பயிற்சியை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பயிற்சியில் சுமார் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) பல்வேறு பகுதிகளில் இருந்து ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏவுகணைப் பிரிவுகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

$2 Trillion at Risk Irans Secret Plan Puts US in Trouble
கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! பற்றி எரிந்த தீ.. ஈரான் அதிரடி எச்சரிக்கை!

இமாத் (Emad), கொரம்ஷஹர் (Khorramshahr), கைபர் ஷேகன் (Kheibar Shekan) உள்ளிட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திறன்களும் இந்தப் பயிற்சியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

போருக்கு முன்பு ஈரானிடம் சுமார் 2,500 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாக இஸ்ரேல் மதிப்பிட்டிருந்தது. ஜூன் மாதத்தில் வெளியான மேற்கத்திய மதிப்பீடுகளின்படி, போருக்கு முன்பு இருந்த ஏவுகணைகளில் சுமார் முக்கால் பங்கு ஈரானிடம் எஞ்சியிருந்ததாகக் கூறப்பட்டது.

iran Shahed drones
iran Shahed dronesreuters

பிப்ரவரி 28 முதல் ஈரான் 2,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 4,000-க்கும் அதிகமான ஷாஹெட் ரக ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸ் மதிப்பிட்டுள்ளது.

$2 Trillion at Risk Irans Secret Plan Puts US in Trouble
உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்ட ஆய்வு.. 2 பேருக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com