\
2026 Sveriges Prize in Economic Science announced
nobel prize reuters

உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்ட ஆய்வு.. 2 பேருக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு!

பொருளாதாரத்தில் ஏற்படும் பெரிய மாற்றங்களைச் சமாளிப்பதற்கான கொள்கைகளை உருவாக்க உதவும் அடிப்படை ஆய்வுகளை இருவரும் மேற்கொண்டுள்ளனர்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் ராபர்ட் இ. ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பாதிப்புகளையும் சமாளிப்பதற்கான ஆய்வுப் பணிகளுக்காக இருவருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி இந்த விருதை அறிவித்துள்ளது.

 Hall, Woodford
Hall, WoodfordReuters

ராபர்ட் ஹால், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர். மைக்கேல் வுட்ஃபோர்டு, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவருக்கும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் ஏற்படும் பெரிய மாற்றங்களைச் சமாளிப்பதற்கான கொள்கைகளை உருவாக்க உதவும் அடிப்படை ஆய்வுகளை இருவரும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் புரிந்துகொள்ள இவர்களின் ஆய்வுகள் உதவுகின்றன.

எரிசக்தி நெருக்கடி ஏற்படும்போது அல்லது மக்கள் தங்களது செலவுகளைக் குறைக்கும்போது பொருளாதாரத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற சூழல்களைச் சமாளிக்க மத்திய வங்கிகளுக்கும் அரசுகளுக்கும் இவர்களின் ஆய்வுகள் உதவுவதாக விருது அறிவிப்புக் குழுத் தலைவர் ஜான் ஹாஸ்லர் தெரிவித்துள்ளார்.

இந்த விருதுக்காக சுமார் 12 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 கோடி ஆகும். டிசம்பர் 10-ஆம் தேதி நார்வேயின் ஒஸ்லோ நகரில் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்துக்கான விருதுடன் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நிறைவடைந்துள்ளன.

2026 Sveriges Prize in Economic Science announced
தமிழ் வம்சாவளிப் பெண்ணுக்கு நோபல் பரிசு! நவநீதம் பிள்ளையின் உலக சாதனை! யார் இவர் ?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com