ஜெர்மனி| பேரணியில் ஈடுப்பட்டவர்கள் மீது திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபர்! பலர் காயம்!

ஜெர்மனியில் பொதுமக்கள் மீது ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெர்மனி
ஜெர்மனிx page

ஜெர்மனியின் தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் நேற்று காலை 11.30 மணியளவில் வலதுசாரி அமைப்புகளின் பேரணி ஒன்று நடைபெற்றது. இது இஸ்லாமிய எதிர்ப்பு பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. பேரணி நடத்திய அமைப்பு அத்தகைய சிந்தனை கொண்டது.

பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு நபர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறிடித்துக் கொண்டு ஓடினர். மறுபுறம், பொது மக்கள் அவரை தடுக்க முயற்சி செய்தபோதும் அவர் தொடர்ந்து தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக தெரியவில்லை என்றும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை இருப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் அவர், "நமது ஜனநாயகத்தில் வன்முறை என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதல் நடத்தப்பட்டவர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: குழந்தையுடன் இயேசு கிறிஸ்து| ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷாவின் வைரலாகும் படம்.. ரசிகர்கள் கேள்வி?

ஜெர்மனி
வாரம் 4 நாட்கள் வேலை: நாளை முதல் சோதனையில் இறங்கும் ஜெர்மனி.. குறைவான வேலைநேர பட்டியலில் 21 நாடுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com