\
anirudh
anirudhinstagram

அனிருத்-க்கு விரைவில் திருமணம்! வருங்கால மனைவி இவர் தான்! யார் இந்த காவ்யா மாறன்?

அனிருத்தின் வருங்கால மனைவியான காவ்யா மாறன் குறித்து பலருக்கும் தெரியாத பல்வேறு சுவாரசிய தகவல்கள் வைரலாகி வருகிறது.
Published on: 
Summary

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. அவரது வருங்கால மனைவி, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன். திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வுகள் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இவரது இசையில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான சூழ்நிலையில், அனிருத்தின் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், அனிருத்துக்கும் தான், நவம்பர் 21-ஆம் தேதி அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வையொட்டி, கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி, அனிருத் ஆகியோர், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து, அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

முன்னதாக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, இசையமைப்பாளர் அனிருத்துக்கும், காவ்யா மாறனுக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த அறிவிப்பு மூலம் அந்த தகவல் உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அனிருத் திருமணம் செய்துக் கொள்ள உள்ள காவ்யா மாறன் தொடர்பான, பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kavya maran
kavya maraninstagram
anirudh
ஜெயிலர் 2 | ‘பழக்கடை மூர்த்தி அண்ணே பயலுக..’ இந்திய அளவில் ட்ரெண்ட்டான ‘MOORTHY' கேரக்டர்!

அதாவது, கலாநிதி மாறனின் ஒரே மகளான காவ்யா, லண்டனில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில், எம்.பி.ஏ பட்டம் பயின்றுள்ளார். என்னதான் நிர்வாக தலைவரின் மகளாக இருந்தாலும், தங்களது சொந்த நிறுவனத்திலேயே, பல்வேறு அடிமட்ட வேலைகளில் பணியாற்றிய பிறகு தான், அவர் நிர்வாக பொறுப்புகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் என்ற அணியை நிர்வகித்து வரும் காவ்யா மாறன், தென்னாப்ரிக்க டி20 லீக் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

ஐ.பி.எல் போட்டிகளை காண்பதற்காக, மைதானத்திற்கு வரும்போது, காவ்யா மாறனின் பல்வேறு ரியாக்ஷன்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி, ரசிகர்களை கவருவது வழக்கம். அதனால், அவரை நேஷனல் கிரஷ் என இணையவாசிகள் சிலர் அழைப்பதுண்டு. இவ்வாறு இணையத்தில் ரசிகர்களை வைத்திருந்தாலும், சமூக வலைதளங்களில் எந்தவொரு கணக்கை வைத்துக் கொள்ளாத இவர், தனிப்பட்ட வாழ்க்கை மீது ஊடக வெளிச்சம் விழக் கூடாது என்று விரும்புபவர் என்றும் சொல்லப்படுகிறது.

anirudh
வெறும் 2 நாளில் 200 கோடி வசூல்! ரஜினியின் 1000 கோடி சம்பவம் ரெடி.. திரையில் மிரட்டும் ஜெயிலர் 2!
anirudh
சாபத்தை போக்கிய நெல்சன்.. இமாலய வசூலை தொடுகிறதா ஜெயிலர் 2? ட்ரோலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com