\
Jailer 2 Moorthy
Jailer 2 MoorthyJailer 2 Promo

ஜெயிலர் 2 | ‘பழக்கடை மூர்த்தி அண்ணே பயலுக..’ இந்திய அளவில் ட்ரெண்ட்டான ‘MOORTHY' கேரக்டர்!

ஜெயிலர் 2 படத்தில் மூர்த்தி கதாபாத்திரம் இந்திய அளவில் டிரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published on: 
Summary

ஜெயிலர் 2 படத்தில் மூர்த்தி கதாபாத்திரம் இந்திய அளவில் டிரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

"அவன் எடுத்தது யானையும் இல்ல, வெட்டுனது ராஜாவும் இல்ல, ஆனா எவ்ளோ confident-ஆ சொல்லிட்டு நடந்து போறான் பாரு..." என்ற வசனம் வரும்போது ஒட்டுமொத்த திரையரங்கமும் சிரிப்பலையால் வெடிக்கிறது. இதை சாத்தியமாக்கிய ஜெயிலர் 2 படத்தின் மூர்த்தி என்ற கதாபாத்திரம் தான் தற்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது.

யார் அந்த மூர்த்தி? என்ற கேள்வியோடு தொடங்கும் நமோநாராயணா பாத்திரம், தான்ஒரு ரௌடி, தனக்கு எல்லோரும் பயப்படுவார்கள், தான் செய்வதுதான் 100% சரி என்ற வெற்றுஉதாருடன் சுற்றும் நபராக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பாத்திரத்திற்கு வசனத்தை கடந்து உடல்மொழியால் உயிர் கொடுத்திருக்கும் நமோநாரயணா ‘மூர்த்தியாகவே’ வாழ்ந்துள்ளார்.

ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, ஜாக்கி ஷரஃப், ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, சுராஜ், நமோநாரயணா உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜெயிலர் முதல் பாகத்தின் கதை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நடப்பது போல ஜெயிலர் 2 கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வில்லன் கேங் ஜெயிலர் ரஜினியை தேடுவதுபோலவும், ஆனால் வில்லன்கள் வந்துசேருவதற்குள் ஜெயிலரே வில்லன்கள் குழுவுக்குள் ஊடுறுவதுபோலவும் படம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ரஜினி பயன்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரம் தான் ‘மூர்த்தி’.

படத்தின் முதல் பாதி முழுவதையும் மூர்த்தி கதாபாத்திரமே ஆக்கிரமித்துள்ளது, அப்பாத்திரத்தின் டயலாக் டெல்வரி, அட்டகாசமான நடிப்பு, உடல்மொழி என அனைத்துமே சிரிப்பு பட்டாசாய் தியேட்டரில் வெடிக்கிறது. நீண்டநாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தில் இவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருப்பது படத்திற்கு பெரிய பாசிட்டிவாக அமைந்துள்ளது.

அவன் எடுத்தது யானையும் கிடையாது, போட்டது ராஜாவும் கிடையாது என்ற வசனமே ஒரு பட்டாசுதான் என்றாலும், ‘எனக்கு தெரியாமலேயே உங்களை எனக்கு பிடித்துவிட்டது’ என்ற வசனம் வரும்போது ‘i dont care' என பதிலளிக்கும் மூர்த்தியின் கதாபாத்திரம் நம்மை தியேட்டரிலிருந்து வெளியேவந்தாலும் விட்டுவிலகுவதில்லை. இப்படியான கதாபாத்திரங்கள் நம்மை சுற்றியே இருப்பார்கள் என்பதால், அது நம்மை இன்னும் நெருக்கமாக கட்டிப்போடுகிறது.

நெல்சன் சார் ‘எங்களுக்கு மூர்த்தி வெர்சன் மட்டும் தனியாக ஸ்பின்ஆஃப் வேண்டும்’ எனவும், ‘பழக்கடை மூர்த்தி அண்ணே பயலுக’ என ரசிகர்களை கொண்டாடவும் வைத்திருக்கிறது ஜெயிலர் 2-வின் மூர்த்தி கதாபாத்திரம். படத்தில் யாருடைய கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்திருந்தது என்ற கேள்விக்கு ரஜினியும், இயக்குநர் நெல்சனும் நமோநாராயணா பெயரை குறிப்பிட்டது மீண்டும் வைரலாகிவருகிறது.

Jailer 2 Moorthy
எப்படி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் `ஜெயிலர் 2’ | Jailer 2 Review
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com