பசுவிடம் பால்குடிக்கும் ஆட்டுக்குட்டி
பசுவிடம் பால்குடிக்கும் ஆட்டுக்குட்டிputhiyathalaimurai

பசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி.. அலட்டிக்கொள்ளாமல் அரவணைக்கும் பசு.. வைரலாகும் வீடியோ!

தனது தாய் இருந்தும் பசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
Published on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையை சேர்ந்தவர் விவசாயி அசோக் குமார். தனது வயலில் விவசாயம் செய்து வருவதோடு, ஆடு, மாடுகளையும் குடும்பத்தினர் பாசத்தோடு வளர்த்து வருகின்றனர். சிலர் நாய் செல்லப்பிராணியாக இருக்கும், சிலருக்கு பூனைகள் மற்றும் பறவைகள் போன்றவை செல்லப்பிராணிகளாக இருக்கும். ஆனால், அசோக் குமார் குடும்பத்தாரோ, வீட்டில் ஆடு மாடுகள் அனைத்தையும் செல்லமாக வளர்த்து வருகின்றனர்.

லாப நோக்கத்திற்காக மட்டுமின்றி அவற்றின் மேல் உள்ள பாசம் காரணமாகவும், தலைமுறை தலைமுறையாக அசோக் குமாரின் குடும்பத்தார் ஆடு மாடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருக்கும் ஒரு பசு, மூன்று மாதங்களுக்கு முன்பு கன்றை ஈன்றுள்ளது. இளங்கன்றும் பால்குடித்து வரும் நிலையில், அதே வீட்டில் இருக்கும் ஆடும் குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில், தனது தாய் இருக்க, பசித்தவுடன் நேராக பசுமாட்டிடம் சென்ற ஆட்டுக்குட்டி பால் குடிக்கத்தொடங்கியுள்ளது.

பசுவிடம் பால்குடிக்கும் ஆட்டுக்குட்டி
உயிரிழந்த நண்பனுக்கு இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்- புகைப்படத்திற்கு கேக் ஊட்டிய சோகம்?

இன்று மட்டுமல்லாமல் பல நாட்களாகவே இந்த ஆட்டுக்குட்டி பசுமாட்டிடம் பால் குடித்து வருவதாக சொல்லப்படுகிறது. சில இடங்களில் தாய் இன்றி தவிக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு நாய்கள் தாயுள்ளத்தோடு பால்கொடுப்பதை பார்த்திருப்போம். இந்த நிலையில், தனது தாய் இருந்தும், உரிமையோடு பசுவிடம் ஆட்டுக்குட்டி பால் குடிப்பதும், அதனை பசுமாடும் அனுமதிப்பதுமான செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆட்டுக்குட்டி பசு மாட்டிடம் பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com