உயிரிழந்த நண்பனுக்கு இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்- புகைப்படத்திற்கு கேக் ஊட்டிய சோகம்?

மயிலாடுதுறையில் உயிரிழந்த நண்பனுக்கு இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நண்பனுக்கு இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்
உயிரிழந்த நண்பனுக்கு இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள் file image

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன்.இவருடைய மகன் மணிகண்டன்(38). இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது 39 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாட அவருடைய நண்பர்கள் முடிவு செய்தனர்.

உயிரிழந்த நண்பனுக்கு இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர் கும்பலை சுற்றிவளைத்த போலீஸ்... 4 போன்கள் பறிமுதல்!

இந்நிலையில் இன்று அவரை அடக்கம் செய்த இடுகாடு சமாதியில் சக நண்பர்கள் சேர்ந்தது கண்ணீர் மல்க அவரது திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர்தூவி, கேக் வெட்டி புகைப்படத்திற்கு ஊட்டிவிட்டு பாசத்தைக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாடினர்.

புகைப்படத்திற்கு கேக் ஊட்டிய நண்பர்கள்
புகைப்படத்திற்கு கேக் ஊட்டிய நண்பர்கள்
உயிரிழந்த நண்பனுக்கு இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்
மிக்ஜாம் புயல் எதிரொலி - 2 நாட்களாகத் தண்ணீரில் மிதக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்!

இதனையடுத்து உயிரிழந்த நண்பனுக்குப் பிடித்த இனிப்பு வகைகள் வைத்து, படையலிட்டும், பிடித்த விளையாட்டான செஸ் (சதுரங்கம்) விளையாடினர். சிறு வயதிலிருந்தே ஒன்றாகச் சுற்றித்திரிந்த நண்பன் இறந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் மல்க "நட்புக்காக" படத்தில் வரும் "மீசைக்கார நண்பா" பாடலை பாடியும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com