யூடியூப்பில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு சிக்கல்?.. அமலுக்கு வந்தன புதிய கட்டுப்பாடுகள்!
உலகத்துக்கே வீடியோ விருந்து படைக்கிற ஒரு பெரிய மேடை தான் யூடியூப்... 200 கோடி பேருக்கும் மேல இந்த யூடியூப்பை ஆக்டிவாக பயன்படுத்தி வராங்க.. கிரியேட்டர்கள் பலரும் இதுல வீடியோ போட்டு காசு பார்க்குறாங்க. பணம் சம்பாதிக்க ஆரம்பத்துல என்ன வீடியோன்னாலும் போடலாம்ன்னு இருந்தது. அப்புறம், 1000 சப்ஸ்கிரைபர், இவ்வளவு மணி நேரம் பார்க்கணும்ன்னு சில கண்டிஷன்ஸ் போட்டாங்க.. இப்போ, 2025-ல ஒரு மெகா கிளீனிங் ஆரம்பிச்சிருக்கு.. இனிமேல், ஒரிஜினல் கன்டென்ட்டுக்குதான் மதிப்பு..
ஸ்பேம் வீடியோக்கள், ஒரே கன்டென்ட்ட திரும்பத் திரும்ப போடுறது, AI-யை வச்சு உருவாக்குன சவுண்ட், படம்னு எதுக்குமே இனி காசு இல்ல.. கம்மியான தரம் அல்லது "காப்பி-பேஸ்ட்" கன்டென்ட் போடுற கிரியேட்டர்களுக்கு, இனி வருவாய் வர்றதுக்கு ரொம்பவே கஷ்டப்படணும்... AI-யை வச்சு சும்மா ரெண்டே நிமிஷத்துல வீடியோ பண்ணி, சப்ஸ்கிரைபர்ஸ், வியூஸ்னு காசு பார்த்துக்கிட்டு இருந்தவங்களுக்கு இனி ஏமாற்றம்தான்...
உண்மையான, வித்தியாசமான, தரமான வீடியோ போடுற கிரியேட்டர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தரமான கன்டென்ட் வந்தா, மக்கள் இன்னும் அதிக நேரம் யூடியூப்ல இருப்பாங்க, விளம்பரம் நிறைய ஓடும், யூடியூபுக்கும் லாபம்னு கிடைக்கும்னு இந்த CHANGES -கொண்டு வந்திருக்காங்க..
நியூ CHANGES இப்ப implement ஆகிடிச்சுு.. இனி, யூடியூப்-ல உண்மையிலேயே தரமான, புத்தம் புது வீடியோக்களை பார்க்கலாம்னு நம்புவோம்..