Poco X7, Poco X7 Pro launched
Poco X7, Poco X7 Pro launchedweb

ரூ.21,999 முதல்... 5G வசதியுடன் அறிமுகமான Poco X7, Poco X7 Pro! சிறப்பம்சங்கள் என்னென்ன?

போகோ மொபைல் நிறுவனமானது 5G வசதியுடன் கூடிய Poco X7, Poco X7 Pro என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

இந்தியாவில் வளர்ந்துவரும் மொபைல் நிறுவனமான போகோ, அதன் அப்டேட் செய்யப்பட்ட X சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களான Poco X7, Poco X7 Pro மொபைல்களை 5G வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் அக்சய் குமார் முன்னிலையில், மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே, பேட்டரி லைஃப் மற்றும் புதிய புராசஸ்ஸர் கொண்ட மாடல்களாக Poco X7, Poco X7 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

Poco X7, Poco X7 Pro launched
இந்தியாவில் அறிமுகமாகும் OnePlus 13, 13R ஸ்மார்ட் போன்கள்! விலை, சிறப்பம்சங்கள் என்ன?

விலை

Poco X7 5G ஸ்மார்ட் போன்,

8GB + 128GB மாடலானது ரூ.21,999 விலையிலும்,

8GB + 256GB மாடலானது ரூ. 23,999 விலையிலும் கிடைக்கிறது.

காஸ்மிக் சில்வர், கிளேசியர் கிரீன் மற்றும் போகோ மஞ்சள் முதலிய 3 நிறங்களில் கிடைக்கிறது.

Poco X7
Poco X7

Poco X7 Pro 5G ஸ்மார்ட் போன்,

8GB + 256GB மாடலானது ரூ.26,999 விலையிலும்,

12GB + 256GB மாடலானது ரூ. 28,999 விலையிலும் கிடைக்கிறது.

நெபுலா க்ரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் போகோ மஞ்சள் முதலிய 3 நிறங்களில் கிடைக்கிறது.

முதல் நாள் விற்பனையின் போது 1000 முதல் 2000 வரையிலான தள்ளுபடியில் Poco X7 ரூ.19,999 விலையிலும், Poco X7 Pro ரூ.24,999 விலையிலும் கிடைக்கின்றது.

Poco X7 Pro விற்பனையானது ஜனவரி 14-ம் தேதியிலும், Poco X7 விற்பனையானது ஜனவரி 17-ம் தேதியிலும் தொடங்குகிறது.

Poco X7, Poco X7 Pro launched
WhatsApp Pay அதன் UPI சேவையை அனைத்து பயனர்களுக்கும் நீட்டிக்கிறது.. NPCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிறப்பம்சங்கள்

Poco X7 5G ஸ்மார்ட் போன்,

  • 6.73 இஞ்ச் உடன் 1.5K AMOLED 3D கர்வ்டு டிஸ்பிளே மற்றும் 3000 nits ப்ரைட்-னஸ் உடன் இடம்பெற்றுள்ளது

  • தண்ணீர் மற்றும் தூசி என அன்றாட சவால்களை எதிர்கொள்ளும் விதமாக IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் மதிப்பிடப்பட்டுள்ளது

  • 7300 அல்ட்ரா சிப்செட் மூலம் சிறந்த செயல்திறன் கொண்ட 5500mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது

  • 45W ஹைப்பர்சார்ஜ் இடம்பெறுகிறது

  • AI பியூச்சர்கள் அடங்கிய 50MP Sony LYT-600 முதன்மைக் கேமரா

Poco X7 Pro 5G ஸ்மார்ட் போன்,

  • X7 Pro ஆனது MediaTek Dimensity 8400 அல்ட்ரா பிரசஸரில் இயங்கும் வகையில் அறிமுகமாகிறது

  • 6.67-இன்ச் AMOLED ஃபிளாட் டிஸ்ப்ளேவுடன் 1.5K தெளிவுத்திறனையும் 3200 nits ப்ரைட்-னஸும் இடம்பெற்றுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% மேம்பட்டதாகும்.

  • சிலிக்கான் கார்பன் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட 6550mAh பேட்டரி

  • 90W ஹைப்பர்சார்ஜ் இடம்பெறுகிறது, இதன்மூலம் அதிவேகமாக 19 நிமிடங்களில் 0 - 50% சார்ஜை பெறமுடியும்

  • IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் மதிப்பிடப்பட்டுள்ளது

  • Xiaomi HyperOS 2.0 ஐக் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாகும்

  • AI பியூச்சர்கள் அடங்கிய 50MP Sony LYT-600 முதன்மைக் கேமரா

Poco X7, Poco X7 Pro launched
ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் பதிவுகளுக்கான தணிக்கை நடைமுறை ரத்து.. மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com