ஜெட் வேகத்தில் நடந்த விற்பனை; லட்சக்கணக்கில் விலைக்குறைப்புடன் சிறப்புச் சலுகையை அறிவித்த மஹிந்தரா!

மூன்று வருடங்களுக்குள் 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற சாதனையை எட்டியதை கொண்டாடும் பொருட்டு மஹிந்தரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி ரக கார்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 ரக கார்
மஹிந்திரா எக்ஸ்யூவி700 ரக கார்pt web

இந்தியாவில் கார் விற்பனையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இந்நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 ரக மாடல்கள் உச்சத்தைத் தொட்டுள்ளன. இந்த ரக கார் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இது எக்ஸ்யூவி 500 எனும் ரக காரின் அப்டேட்டட் வெர்சன் என்றே அறியப்படுகிறது. ஆனாலும் மக்கள் மத்தியில் இந்த ரக காருக்கு இருந்த வரவேற்பின் காரணமாக 3 வருடங்களுக்குள் 2 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

2 லட்சம் எட்டியதன் விற்பனைக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மஹிந்திரா நிறுவனமானது எக்ஸ்யூவி 700 ரக மாடல்களின் விலையை குறைத்துள்ளது. இதிலும், எக்ஸ்யூவி 700ன் அனைத்து மாடல்களுக்கும் அல்லாமல், அதன் top XUV 700 variant ரகமான AX7 என்ற மாடலுக்கு சலுகையை அறிவித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 ரக கார்
“விஷம் கலந்திருக்கு குடிக்காத” நண்பரின் பேச்சை கேட்காமல் மதுவை குடித்தவர் மரணம்! ட்விஸ்ட் ஆன சம்பவம்

அதன்படி, இந்த AX7 மாடலுக்கான விலை எக்ஸ் ஷோரூம் விலையில், ரூ.21.54 லட்சத்தில் இருந்து ரூ.19.49 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஜூலை 10 ஆம் தேதியான இன்று தொடங்கி அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமெ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது பிராண்ட்களின் சில கார் ரகங்களின் விலையைக் குறைத்திருந்தது. இந்நிலையில் மஹிந்தரா நிறுவனமும் விலைகுறைப்பு சலுகையை வழங்கியுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 ரக கார்
புதுக்கோட்டை | பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு பணி மாற்றம்... பரிதவிக்கும் மாணவர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com