“விஷம் கலந்திருக்கு குடிக்காத” நண்பரின் பேச்சை கேட்காமல் மதுவை குடித்தவர் மரணம்! ட்விஸ்ட் ஆன சம்பவம்

மயிலாடுதுறையில் மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதை தெரியாமல் குடித்த அவரது நண்பர் உயிரிழந்தார். தற்கொலைக்கு முயற்சித்த நபருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகிச்சையில் ஜோதிபாசு, உயிரிழந்த ஜெரால்டு
சிகிச்சையில் ஜோதிபாசு, உயிரிழந்த ஜெரால்டுpt web

செய்தியாளர் சீர்காழி ஆர்.மோகன்

மன உளைச்சலில் தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை அருகே மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், விஷம் கலந்த மதுபானத்தை தெரியாமல் குடித்த அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயற்சித்த நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். மேலும், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்ட காரணத்தினால் ஜோதிபாசு மன உளைச்சலில் இருந்துந்துள்ளார்.

சிகிச்சையில் ஜோதிபாசு, உயிரிழந்த ஜெரால்டு
1976ல் இந்தியாவோடு இணைந்த கல்வராயன் மலைப்பகுதி.. அம்மக்களுக்காக அரசு செய்தது என்ன? நீதிமன்றம் கேள்வி

மதுவில் கலக்கப்பட்டிருந்த விஷம் 

இந்நிலையில், நேற்று மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் நல்லாத்தூரில் உள்ள மதுபான கடையில் குடித்துவிட்டு, மதுபானம் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து வீட்டின் அருகே தென்னம்பிள்ளை சாலை பகுதியில் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு பாதி வைத்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது நண்பரான ஜெரால்டு என்பவர், பூச்சி மருந்து கலந்து இருப்பதை அறியாமல் ஜோதிபாசுவிடம் மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார்.

சிகிச்சையில் ஜோதிபாசு, உயிரிழந்த ஜெரால்டு
சிகிச்சையில் ஜோதிபாசு, உயிரிழந்த ஜெரால்டு

மதுவில் விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்தும், ஏற்கனவே மது அருந்தி உச்ச போதையில் இருந்த ஜெரால்டு நண்பரின் பேச்சைக் கேட்காமல் குடித்துள்ளார். நீண்ட நேரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியிலேயே ஜோதிபாசு மருந்து கலந்து குடித்த மதுபானத்தை வாந்தி எடுத்துள்ளார். பின்னர் வெகு நேரத்துக்கு பிறகு ஜெரால்டு வீட்டிற்கு ஜோதிபாசு தகவல் கொடுக்கவே அங்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சையில் ஜோதிபாசு, உயிரிழந்த ஜெரால்டு
ஹிஜாப் அணிய மறுத்த பெண்கள்.. துருக்கியின் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான்!

பல்வேறு கோணங்களில் விசாரணை

அங்கு சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜெரால்டு உயிரிழந்தார். மேலும் ஜோதி பாசுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெரம்பூர் காவல்துறையினர் ஜெரால்டுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர். தொடர்ந்து முன்விரோதம் காரணமாக ஜோதிபாசு கொலை செய்யும் நோக்கில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து ஜெரால்டிற்கு கொடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிகிச்சையில் ஜோதிபாசு, உயிரிழந்த ஜெரால்டு
கர்நாடகா: “சிறை உணவு ஜீரணமாகவில்லை; வீட்டு சாப்பாடு வேண்டும்” - நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் மனு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com