instagram
instagramweb

வாட்ஸ்அப் போன்று live location ஷேர் செய்யலாம்.. Instagram கொண்டுவரும் 3 அசத்தலான அப்டேட்கள்!

இன்ஸ்டாகிராம் தன்னுடைய பயனர்களை மேலும் கவரும் வகையில் செல்லப்பெயர், 17 ஸ்டிக்கர்ஸ் பேக், லைவ் லொகேஷன் ஷேரிங் முதலிய குவாலிட்டியான அப்டேட்களை கொண்டு வருவதில் செயல்பட்டு வருகிறது.
Published on

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் இளம்வயதினரின் கூடாரமாக இருந்துவரும் இன்ஸ்டாகிராம் 3 புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவதில் செயல்பட்டுவருகிறது.

அறிமுகப்படுத்தவிருக்கும் செல்லப்பெயர் (NickName), 17 ஸ்டிக்கர்ஸ் பேக், லைவ் லொகேஷன் ஷேரிங் போன்ற அப்டேட்கள் மெசெஞ்சர் சாட்டிங்கை மேலும் சுவாரசியமாக்குகின்றன.

instagram
ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ.. 10 வயது இந்திய வம்சாவளி ‘அறிவு குழந்தை’!

1. 300-க்கும் மேற்பட்ட புதிய ஸ்டிக்கர்கள்

instagram
instagram

இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு கூடுதல் ஃபன் மெட்டீரியலாக 17 ஸ்டிக்கர் பேக்குகளும், அதில் 300-க்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்களும் இடம்பெறவுள்ளன. இவை தங்களுடைய நண்பர்கள், பார்ட்னர்கள் மற்றும் குடும்பத்தினரிடையேயான உரையாடலை மேலும் சுவாரசியமாக்குகின்றன. இதில் உங்களுக்கு ‘favorites’ என்ற ஆப்சனும் வழங்கப்படுகிறது. அதில் நண்பர்கள், உறவினர்களுடன் அதிகமாக பகிர நினைக்கும் ஸ்டிக்கர்களை உங்களால் ஸ்டோர் செய்து வைக்கமுடியும்.

instagram
இனி தனி ஸ்டிக்கருக்கு பதிலாக; முழு ஸ்டிக்கர் தொகுப்பையும் ஷேர் செய்யலாம்.. WhatsApp-ன் புது அப்டேட்!

2. செல்லப்பயெர் (NickName)

இந்த அப்டேட்டானது அறிமுகப்படுத்தப்படுவதில் அதிகமான இளம்வயதினரை கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. புனைப்பெயர்கள் அல்லது செல்லப்பெயர்களை வைத்து உரையாடுவது என்பது இளம்வயதினரை மேலும் அவர்களுக்கு விருப்பமான நபர்களுடன் தங்களுடை பிணைப்பை அதிகமாக்க உதவுகிறது.

இந்த அப்டேட்டை பொறுத்தவரையில், மெசெஞ்சர்களில் சாட்டிங் செய்யும் இருவரும் செல்ல பெயர்களை பயன்படுத்துவதற்கான ஆப்ஷனை இன்ஸ்டாகிராம் வழங்குகிறது. இந்த பெயரானது DM சாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும், மாறாக புரொஃபைல் நேம்களை உங்களால் மாற்றமுடியாது. அதாவது இன்ஸ்டாகிராமில் உள்ள யூசர் நேம் எந்த வகையிலும் மாறாது. ஒரு நபரை ஃபாலோ செய்யும் அனைவரும் அவர்களுடைய செல்லப் பெயரை டிஃபால்டாக மாற்றிக் கொள்ளவும் இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது.

instagram
instagram

மேலும் ஒரு சாட்டில் இந்த செல்ல பெயரை யார் மாற்றலாம் என்ற கட்டுப்பாட்டை வழங்கக்கூடிய அனுமதியும் கிடைக்கிறது. நீங்கள் நிக்நேமை உருவாக்குவதற்கு சாட்டின் மேற்புறத்தில் காணப்படும் ‘Nicknames’ என்பதை கிளிக் செய்து பெயர்களை மாற்றிக்கொள்ளலாம்.

instagram
இனி ’OTP’ பெறுவதில் தாமதம் ஆகுமா..? டெலிகாம் நிறுவனங்களுக்கான நிபந்தனை என்ன? TRAI விளக்கம்!

3. லைவ் லொகேஷன் ஷேரிங்

லைவ் லொகேஷன் ஷேரிங் என்பது வாட்ஸ்அப்பில் எந்தளவு பயனுடையதாக இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அந்தவகையில் இன்ஸ்டாகிராமிலும் இது அறிமுகப்படுத்துவது அப்டேட்களின் ஹைலட்டாக அமைந்துள்ளது.

இந்த அப்டேட்டின் படி, இன்ஸ்டாகிராம் இப்போது தங்களுடைய பயனர்களை ஒரு மணிநேரம் வரை லைவ் லொகேஷனை பகிர அனுமதிக்கிறது. பிரைவசியை உறுதிப்படுத்தும் வகையில் உங்களால் மெசெஞ்சர்களில் மட்டுமே லைவ் லொகேஷனை ஷேர் செய்யமுடியும், அதில் மேப்பில் குறிப்பிட்ட இடத்தை பின் செய்து வைக்கவும் இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது. நண்பர்களுடன் எங்காவது ஃபங்சன், டூர், சினிமா, கிரிக்கெட் போட்டிகளை பார்க்க செல்லும்போது, அவர்களை எளிதாக ரீச்சாகும் வகையில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கப்போகின்றது.

மேலும் ஒரு மணிநேர லைவ் லொகேஷன் ஷேரிங்கிற்கு பிறகு தானாகவே ஷேரிங்கை அனைத்துவிடும்வகையிலும் இடம்பெற்றுள்ளது. ஸ்டிக்கர்ஸ், நிக்நேம் அப்டேட்கள் இந்தியாவில் கிடைக்கும் நிலையில், லைவ் லொகேஷன் ஷேரிங் அப்டேட் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

instagram
புதிய PAN கார்டுகளை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்.. PAN 2.0 திட்டம் என்றால் என்ன? முழு விவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com