வாட்ஸ்அப் அப்டேட்
வாட்ஸ்அப் அப்டேட்web

இனி தனி ஸ்டிக்கருக்கு பதிலாக; முழு ஸ்டிக்கர் தொகுப்பையும் ஷேர் செய்யலாம்.. WhatsApp-ன் புது அப்டேட்!

வாட்ஸ்அப் ஆனது தங்களுடைய வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவரும் வகையில், புதிய அப்டேட்டாக நாம் கிரியேட் செய்யும் ஸ்டிக்கர் தொகுப்பை அப்படியே நண்பர்களுக்கு ஷேர் செய்ய அனுமதிக்கிறது.
Published on

நம்மில் கிட்டத்தட்ட 90% மக்கள், மற்ற செயலிகளை விட தகவல் பரிமாற்ற இயங்குதளமான வாட்ஸ்அப்பை தான், அதிகமாக பயன்படுத்திவருகிறோம். குடும்பங்கள், நண்பர்கள், வேலைபார்க்கும் இடங்கள், ஆன்மீகம் என ஆரம்பித்து, பல உறவுகளின் பாலமாக வாட்ஸ்அப் இருந்துவருகிறது.

இந்நிலையில், உறவுகளிடையே இருக்கும் அன்பையும், குறும்புத்தனத்தையும் மெருகூட்டும் வகையில் ஸ்டிக்கர்களை பகிர்ந்து அரட்டையடிக்கும் பழக்கம் நம்மிடையே அதிகமாகவே இருக்கிறது. அதிலும் நண்பர்களை கலாய்க்கவோ, காதலி/காதலன் உடன் இருக்கும் அன்பை வெளிப்படுத்தவோ, மீம் கண்டெண்ட்களை எப்போதும் கைவசம் வைத்திருக்கும் விதமாகவோ புதுப்புது ஸ்டிக்கர்களை உருவாக்கி சேவ் செய்துவைத்து, அதை நெருக்கமானவர்களுக்கு அனுப்பி ஃபன் செய்வது வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது.

WhatsApp
WhatsApp

அந்தவகையில் அப்படியான ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப்பிலேயே உருவாக்கும் அம்சத்தை கொண்டுவந்த வாட்ஸ்அப் செயலியானது, தற்போது அந்த ஸ்டிக்கர்களை அப்படியே தொகுப்பாக நண்பர்களுக்கு பகிரும் வகையிலான அப்டேட்டையும் கொண்டுவர உள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்
’இதுல நெறைய ஸ்பெசல் இருக்கு..’ Meta AI உடன் Voice Chat அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்!

முழு ஸ்டிக்கர் தொகுப்பையும் நண்பர்களுக்கு பகிரலாம்..

சமீபத்தில் Wabetalnfo பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டின்படி, வாட்ஸ்அப் பயனாளர்கள் ஸ்டிக்கர் பேக்குகளைப் நண்பர்களுடன் பகிர புதிய அம்சம் அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம் தனிப்பட்ட ஸ்டிக்கரை நீங்கள் பகிர்வதற்குப் பதிலாக, தற்போது முழு ஸ்டிக்கர் பேக்கையும் பகிர்ந்து கொள்ள முடியும். அதை பெற்றுக்கொள்பவரும் அவர்களுடைய ஸ்டிக்கர் ஸ்டோரில் எளிதாக அதனை தரவிறக்கி இணைத்துகொள்ளவும் வழிசெய்கிறது.

இதனை ஸ்டிக்கர் ஸ்டோரில் சென்று, ஒரு ஸ்டிக்கர் பேக்கின் ஓரமிருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து ஷேர் ஆப்சனில் உங்களால் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த அப்டேட்டானது, உங்கள் வாட்ஸ்அப் செயலியை Android 2.24.25.2-ன் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்திருந்தால் ஸ்டிக்கர் பேக்கைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

இது தற்போது வாட்ஸ்அப்பில் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர் பேக்குகளை அனுமதிக்க உதவுகிறது என்றும், மற்ற ஆப்களில் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர் பேக்குகளையும் விரைவில் ஷேர் செய்ய அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்
பகிரப்படும் WhatsApp பயனர்களின் தரவுகள்; மெட்டாவுக்கு ரூ213 கோடி அபராதம் விதித்த CCI.. என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com