டி.என்.ஏ பரிசோதனை செய்துகொள்வதன் மூலமாக உடற்பயிற்சி மற்றும் டயட்டைத் தீர்மானித்துக் கொள்ளும் ட்ரெண்ட் வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது.
எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் சிலர் இதைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் நிலையில், இத்தகைய டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொள்ளும் Orig3n நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ராபின் ஸ்மித் கூறும்போது, “இந்த டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நீங்கள் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும், நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள். இது உங்கள் நேரத்தை, சக்தி மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும்’’ என்று தெரிவிக்கிறார்.
டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக உள்ளதாகவும் மரபணு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

