என்னாது அப்படியா!! ரோபோட் மூலமாக குழந்தை பெறும் புதிய தொழில்நுட்பம்.. 9 மாதத்தில் டெலிவரி!
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி பல துறைகளையும் புரட்டிப் போட்டு வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ரோபோட் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். ஒரு ரோபோட் எப்படி குழந்தையைப் பெத்து எடுக்கும்னு யோசிச்சுப் பார்த்தா தலை சுத்துதுல்ல? ஆனா, இதை நிஜமாக்கியிருக்காங்க சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு.. இந்த ரோபோட்டோட வயித்துல கர்பப்பை மாதிரி ஒரு பைய வைச்சு, அதுக்குள்ள ஒரு 'செயற்கையான அம்னியாடிக் திரவத்தை நிரப்பிடுவாங்களாம். அப்புறம், அதுல விந்தணுவையும், கருமுட்டையையும் சேர்த்து கருவ உருவாக்கி, கிட்டத்தட்ட 9 மாசங்கள் வரைக்கும் குழந்தையை வளர்ப்பாங்களாம்.
அப்புறம், ஒரு குழாய் மூலமா குழந்தைக்கு தேவையான எல்லா சத்துக்களையும் கொடுப்பாங்களாம். இந்த ரோபோட், கரு உருவாவதுல இருந்து, பிரசவம் வரைக்கும் எல்லாத்தையும் கவனிச்சுக்குமாம்.
ஆனாலும், இந்தக் குழந்தை எப்படி உருவாகுது, கருவறைக்குள்ள கரு எப்படி வைக்கப்படுதுனு தெளிவான தகவல் ஏதும் இன்னும் வெளியிடப்படல...
என்னடா இதெல்லாம் சாத்தியமானு நினைக்கிறது தெரியுது... ஆமாங்க.. சாத்தியம்தா, எல்லா வேலையும் முடிஞ்சுஅடுத்த வருஷமே இந்த ரோபோட் விற்பனைக்கு வரும்னு விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க.. ஒரு ரோபோட்டோட விலை கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய்.... ஒரு பக்கம், வாவ்.. என்ன ஒருகண்டுபிடிப்புனு ஆச்சரியத்துல பல பேர்வாய் பிளக்குறாங்க...
குழந்தை இல்லாதவங்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம்னு சொல்றாங்க... இன்னொரு பக்கம், குழந்தைய பெத்து, அதை வளர்க்கிறதெல்லாம் ஒரு தனி ஃபீலிங்யா.. அதெல்லாம் இந்த ரோபோட்கிட்ட இருக்குமானு சிலர் விமர்சிச்சிட்டு வராங்க... அம்மாவோட அன்புக்கு ஈடான தொழில்நுட்பம் எதுவும் இருக்க முடியுமாங்கிறதுதான் இப்போதைய மிகப்பெரிய கேள்வியா இருக்கு.