AI helps cure thyroid
AI helps cure thyroidweb

தைராய்டு பிரச்னைகளுக்கு உதவும் ஏஐ! எப்படி செயல்படுகிறது?

தைராய்டு பிரச்னைகளை குணப்படுத்துவதில் ஏஐ உதவிகரமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் கூறியுள்ளார்.
Published on

தைராய்டு தொடர்பான உடல் நலக் கோளாறுகளை விரைவில் கண்டுபிடித்து உரிய முறையில் சிகிச்சையளிப்பது ஏஐ தொழில்நுட்பம் மூலம் எளிதாகியுள்ளதாக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் அசுதோஷ் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

தைராய்டு பிரச்னைகளுக்கு உதவும் ஏஐ!

இதுகுறித்து பேசிய புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் அசுதோஷ் பிஸ்வாஸ், இந்தியாவில் தைராய்டு தொடர்பான பிரச்சினைகள் பத்தில் ஒருவருக்கு வருவதாக தெரிவித்தார். இப்பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாக வருவதாகவும் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறியுள்ளார்.

தனி நபர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு தனித்துவமான சிகிச்சைகளை அளிக்க ஏஐ உதவிகரமாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஹைப்போ தைரராய்டிசம் பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம், குடல், கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com