CHAT GPT GO | "இந்தியர்களுக்கு ஓர் ஆண்டு இலவசம்” - ஓபன் ஏஐ நிறுவனம் அதிரடி அறிவிப்பு !
இந்தியாவில் சாட்ஜிபிடி கோ-வை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த சந்தா கட்டணத்துடன் அதிகரித்த தகவல் கோரும் வரம்புகள், பட உருவாக்கங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பதில்களுக்காக அதிக நினைவகம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில், சாட்ஜிபிட் கோ-வை இந்தியப் பயனர்களுக்கு ஒரு வருடம் இலவசமாக வழங்குவதாகவும், இந்த சேவை நவம்பர் 4- ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
சாட்ஜிபிடி-யை அதிகம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தான், இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஓபன் ஏஐ’ குறைந்த சந்தா கட்டணத்துடன் சாட்ஜிபிடி கோ-வை உருவாக்கியுள்ளது. இந்த சேவையில், அதிகரித்த தகவல் கோரும் வரம்புகள், அதிகமான பட உருவாக்கங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சூழலை உணரும் பதில்களுக்காக அதிக மற்றும் நீண்ட நினைவகம் போன்ற முக்கிய அம்சங்களை சாட்ஜிபிடி கோ கொண்டுள்ளது.
கூகிள் மற்றும் பெர்ப்ளெக்சிட்டி போன்ற போட்டி நிறுவனங்கள் இந்தியப் பயனர்களைக் கவரும் விதமாக பிரீமியம் சேவைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ள நிலையில், ரூ 399 மாத சந்தா-வை கொண்ட சாட்ஜிபிடி கோ-வை இந்தியாவில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப் போவதாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை பெங்களூரில் நவம்பர் 4 ம் தேதி ஓபன் ஏஐ நிறுவனம் நடத்தவுள்ள சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அறிவிக்கபடவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல பயனர்களும் மேம்பட்ட ஏஐ சேவைகளை அணுகவும், அதன் மூலம் பயனடையவும் சாட்ஜிபிடி கோ-வை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறோம்," என்று சாட் ஜிபிடி நிறுவனத்தின் தலைவர் நிக் டர்லி கூறியுள்ளார்.

