ஐ போன் | அடுத்த மூன்று வருடங்களில் பிரமிக்க வைக்கும் புதிய மாடல்கள்.. எப்படி இருக்கும் ?
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் (2026 - 2028) ஐபோன் வரிசையில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதில் மடிக்கக்கூடிய மற்றும் பிரேம் இல்லாத 'முழு கண்ணாடி' போன்ற புதிய வடிவங்கள் இடம்பெற உள்ளன என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
புத்தக வடிவில் மடிக்கக்கூடிய ஐபோன் :
புத்தக வடிவில் மடிக்கக்கூடிய ஐபோன் 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் போன்று கிடைமட்டமாக மடிக்கும் வடிவத்தைக் கொண்டிருக்கும்.இது சுமார் 7.8 அங்குல முதன்மை டிஸ்ப்ளே, இரட்டை பின்பக்க கேமராக்கள் மற்றும் டச் ஐடி அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஃபிளாட் கேண்டி பார்' பாணியில், நான்கு விளிம்புகளிலும் வளைந்த OLED திரையுடன், பிரேம் (Bezel) இல்லாத தோற்றத்தைக் கொண்டிருக்கும். மேலும், இது ஒரு முழுமையான எட்ஜ்-டு-எட்ஜ் காட்சி அனுபவத்தைத் தரும் என்றும் இது ஆப்பிளின் நீண்ட கால 'ஒற்றைக் கண்ணாடி ஸ்லாப்' வடிவமைப்புத் தத்துவத்தின் உச்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது, 2027 ஆம் ஆண்டு, ஐபோனின் 20-வது ஆண்டு நிறைவையொட்டி வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
செங்குத்தாக மடிக்கும் 'கிளாம்ஷெல்' வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மொபைல் மாடலை 2028 ஆம் ஆண்டு ஐ போன் நிறுவனம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கவர் ஸ்கிரீனில் நோட்டிஃபிகேஷன்கள் தெரிவதற்கான ஒரு சிறிய திரை இருக்கும். மேலும், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) மூலம் இயக்கப்படும் AI ஷார்ட்கட்களையும் இது கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது இளைய தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இருக்கும். இந்த மாடல் இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்தத் திட்டங்கள் அனைத்தும், மடிக்கக்கூடிய போன் சந்தையில் நுழையவும், ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் அடுத்த கட்டப் பாய்ச்சலை ஏற்படுத்தவும் தயாராகி வருவதைக் காட்டுகிறது.

