எல்லையை காக்கும் ஏஐ | நாய்கள் வடிவில் ஏஐ ரோபோக்கள்... ராணுவ வீரர்கள் கூறுவது என்ன?
பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் இயந்திர நாயை இந்தியா பயன்படுத்தி வருகிறது. கரடுமுரடான பாதைகளிலும் எளிதாக செல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
இந்திய எல்லையில் பாகிஸ்தானை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு புதிய ரோபோ வடிவ நாய்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் இந்த ரோபோடிக் நாய்கள், இந்திய ராணுவ படைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பல கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்த ரோபோக்கள் எல்லையில் ரோந்துப் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பொருத்தப்பட்ட கேமராக்கள் காரணமாக, ஆபத்தை முன்கூட்டியே கண்டறிய முடியும். சென்சார்கள் மற்றும் கேமராக்கள் இந்த ரோபோ வடிவில் உள்ள நாய்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரிலும் அவற்றைப் பயன்படுத்தினோம் என ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ரோபோக்களுக்கு 2 கேமராக்கள், 15 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் இந்த உள்ளது. கடும் வெப்பத்திலும் நடுங்கவைக்கும் குளிரிலும் இது சளைக்காமல் பணியாற்றும் என்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ரொபோக்கள் படிக்கட்டுகள், செங்குத்தான மலைகள் மற்றும் பிற தடைகளில் ஏறும் திறன் கொண்டது.. அத்துடன் அதிக ஆபத்து மற்றும் கடுமையான சூழ்நிலைகளில் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. 3 மணிநேரம் நடை சகிப்புத்தன்மை மற்றும் 21 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுப்படும் திறன் கொண்டது..
இது ராணுவ வீரர்களுக்கு உடல் மற்றும் அறிவாற்றல் பணிச்சுமையைக் குறைக்கும் அதே வேளையில் அதன் நிலையான செயல்பாடு பெரும் பாதுகாப்பு ஆதரவை வழங்குகிறது. மல்டி-யூட்டிலிட்டி லெக்ட் எக்யூப்மென்ட் (MULE) என்றும் அழைக்கப்படும் ரோபோ மியூல்களை அவசரகால கொள்முதல்களின் (EP) நான்காவது தவணையின் கீழ் இராணுவம் 100 ரோபோகளை கொள்முதல் செய்து சேர்த்துள்ளது" என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.