அடுத்தாண்டு சந்திரயான் 3 திட்டம் - இஸ்ரோ

அடுத்தாண்டு சந்திரயான் 3 திட்டம் - இஸ்ரோ
அடுத்தாண்டு சந்திரயான் 3 திட்டம் - இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 3 இன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.‌ இந்த திட்டம் அடுத்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும் சந்திரயான் 3 இன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்த கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறனுடனும் வடிவமைக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர்‌ உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com