16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவில் அமேசான்
16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவில் அமேசான் web

Amazon Layoffs| 2026 ஜனவரியிலேயே அதிர்ச்சி.. சுமார் 16,000 பேர் வேலை காலி?

அமேசான் நிறுவனம் 2026 வருடத்தின் தொடக்கத்திலேயே சுமார் 16,000 ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
Published on
Summary

அமேசான் நிறுவனம் 2026 ஜனவரியில் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 30,000 பணியிடங்களை குறைக்கும் அறிவிப்பின் தொடர்ச்சியாக, இந்த நடவடிக்கை AWS, சில்லறை வர்த்தகம், பிரைம் வீடியோ போன்ற முக்கிய பிரிவுகளை பாதிக்கலாம். AI தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்தை வேகப்படுத்தும் நோக்கத்துடன், தேவையற்ற அதிகார அடுக்குகளை குறைக்க அமேசான் முடிவு செய்துள்ளது.

IT உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் ‛அமேசான்' நிறுவனம் அடுத்த வாரம் முதல் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, அமேசான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

amazon
amazon

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமேசான் நிறுவனம் சுமார் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நடவடிக்கையை அடுத்த சில நாட்களுக்குள் செயல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் கார்ப்பரேட் பிரிவில் சுமார் 30,000 பணியிடங்களைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

amazon
amazon

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையினால் அமேசானின் முக்கியப் பிரிவுகளான AWS (Cloud Computing), சில்லறை வர்த்தகம் (Retail), பிரைம் வீடியோ (Prime Video), மனிதவள மேம்பாட்டுத் துறை (HR) ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவில் அமேசான்
6 மாதங்களில் 30,000 ஊழியர்கள்.. 2026லும் தொடரும் பணிநீக்கம்.. எச்சரிக்கை விடுத்த TCS!

பணி நீக்கத்திற்கு இதுதான் காரணம்..?

ஆரம்பத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வருகையால் பணிகள் எளிமையாக்கப்படுவதே இந்த ஆட்குறைப்பிற்கு காரணம் என நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி கூறுகையில், "இது வெறும் நிதி ரீதியானதோ அல்லது AI சார்ந்ததோ மட்டும் அல்ல நிறுவனத்தின் உள்ளே இருக்கும் தேவையற்ற அதிகார அடுக்குகளைக் குறைத்து (Bureaucracy), நிர்வாகத்தை வேகப்படுத்துவதே எங்கள் நோக்கம்," என்று தெரிவித்துள்ளார்.

அமேசான்
அமேசான்புதிய தலைமுறை

அமேசான் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் பெரும்பாலானோர் கிடங்குகள் (Warehouse) மற்றும் (fulfillment centers) விநியோக மையங்களில் பணிபுரிபவர்கள். தற்போது நடக்கவிருக்கும் பணிநீக்கம் கார்ப்பரேட் பிரிவில் உள்ள சுமார் 10 சதவீத ஊழியர்களைப் பாதிக்கும் என்கின்றனர். இது அமேசான் நிறுவனத்தின் 30 ஆண்டுகால வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது கடந்த 2022-ல் சுமார் 27,000 வேலையாட்களை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான 90 நாட்கள் ஊதியக் காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட பணிநீக்கம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவில் அமேசான்
2026 | முக்கியத் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள்.. ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com