Sridhar Vembu & Vijay
Sridhar Vembu & Vijay PT

’திமுக அல்ல அதிமுகவுக்கு தான் வெற்றி.. ஆனால் விஜயின் வளர்ச்சி..’ Zoho நிறுவனர் கணிப்பு!

திமுக அல்லது அதிமுக வெற்றி பெறலாம் என்றாலும், குறுகிய காலத்தில் விஜயின் செல்வாக்கு உயர்வு பாராட்டப்பட வேண்டிய மாற்றமாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிடுகிறார்.
Published on
Summary

தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜயின் எழுச்சி வெறும் சினிமா கவர்ச்சியல்ல என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்துகிறார். டெல்லி விமான நிலைய பாதுகாவலர் முதல் மத்தளம்பாறை விவசாயி வரை பல தரப்பினரும் விஜயின் வெற்றி வாய்ப்பை பேசுவதாக அவர் ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய்யின் வளர்ச்சியைப் பற்றி சுவாரஸ்யமான விஷயத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டை தாண்டியும் விஜய்யின் செல்வாக்கு எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதை தனது டிவீட் வாயிலாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Vijay TVK campaign
Vijay TVK campaign X

டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது, ஓடிஷாவைச் சேர்ந்த ஒரு பாதுகாவலர் ஸ்ரீதர் வேம்புவின் உடையைப் பார்த்து அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என உணர்ந்து அவரிடம் "சார், விஜய் தளபதி ஜெயிப்பாரா?" என்று கேட்டதாக ஸ்ரீதர் வேம்பு தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் பெயரும், அவருடைய அரசியல் வருகை தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலத்திலும், பிற மாநிலத்தவர்கள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளது.

Sridhar Vembu & Vijay
ஆட்சியைப் பிடிக்கும் TVK? பேச்சுவார்த்தையில் அதிமுக? கருத்துக்கணிப்பால் மாறும் அரசியல் களம்?

ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊரான மத்தளம்பாறை-யில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விவசாயி அவரிடம் "விஜய் நமது பூத்தில் ஆச்சரியம் ஏற்படுத்தப் போகிறார்" என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா ரசிகராக இல்லாத அந்த விவசாயி முன்பு அண்ணாமலைக்கு தொண்டராக இருந்தவர் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

vijay
vijay

"துக்ளக்" பகுப்பாய்வு சமீபத்தில் கூறியது போல், தமிழ்நாட்டில் விஜய்-யின் அரசியல் வருகை வெறும் "சினிமா" அல்லது "கிளாமர்" என்று ஒதுக்கிவிட முடியாது என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். பல்வேறு தரப்பு மக்களும் மாற்றத்துக்கான நம்பிக்கையை விஜய் மீது வைத்துள்ளனர் என்பதையும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டினார்.

Sridhar Vembu & Vijay
‘உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு..’ விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்!

நான்கு முனை போட்டி நிலவும் சூழலில் புதிய கட்சி எல்லா தரப்பிலிருந்தும் வாக்குகளை பிரிக்கும் என்பதால் எக்ஸிட் போல் முடிவுகளை நம்ப முடியாது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இருப்பினும், அமைப்பு ரீதியான வலிமை மற்றும் பண பலத்தின் காரணமாக திமுக அல்லது அதிமுக-வில் ஒன்று வெற்றி பெறும் என்றே தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Vijay
Vijay web

இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்தில் விஜய்யின் அரசியல் செல்வாக்கு உயர்வு மிகவும் பாராட்டுக்குரியது என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Sridhar Vembu & Vijay
ஆட்சி அதிகாரத்தில் பங்கு? மே 4-க்கு பிறகு பதிலளிக்கிறேன் - பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீதர் வேம்பு போன்ற தொழில்துறை பிரமுகர்கள் விஜய்யின் அரசியல் பயணத்தை கவனமாகக் கவனித்து வருவது தமிழ்நாடு அரசியலில் நடக்கும் மாற்றத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

vijay
vijay web

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இன் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பில் திளைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Sridhar Vembu & Vijay
ஒரே நாளில் ரூ.990 உயர்ந்த சிலிண்டர் விலை.. 3 மாதத்தில் 81% உயர்வு! கூடும் உணவு விலை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com