அண்ணாமலை
அண்ணாமலைpt web

அண்ணாமலை வீட்டிற்கு திடீர் விசிட்.. பி.எல். சந்தோஷின் சமாதானக் கொடி! ஏற்றுக் கொண்டாரா அண்ணாமலை?

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் செப்டம்பர் 16ம் தேதியான இன்று காலை அக்கரையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
Published on
Summary

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் செப்டம்பர் 16ம் தேதியான இன்று காலை அக்கரையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாகவே பாஜகவின் கூட்டங்களை புறக்கணித்து வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தக் கூட்டத்தையும் புறக்கணித்த நிலையில் கூட்டத்தை தலைமை தாங்கிய தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அண்ணாமலையின் வீட்டிற்கே சென்று அவரை சமாதானப் படுத்தி அவரை கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார். அண்ணாமலை கூட்டத்தைப் புறக்கணிக்கக் காரணம் என்ன? பி.எல்.சந்தோஷிடம் கூறியது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

அண்ணாமலை
அண்ணாமலைஎக்ஸ்

செய்தியாளர் : S.வீரக்குமார்

பாஜக மாநிலத் தலைவராக 4 ஆண்டுகள் அண்ணாமலை பதவி வகித்த நிலையில் தற்போது நயினார் நாகேந்திரனை அக்கட்சி தமிழ்நாட்டின் மாநிலத் தலைவராக நியமித்துள்ளது. மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்து வருகிறார். மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதால் அண்ணாமலைக்கு வேறு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் கட்சித் தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. அதற்கான சாத்தியக் கூறுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அண்ணாமலை
ரஷ்யா | மரணத்தை தள்ளிப்போடும் ஆய்வு.. 9 ஆண்டுகளில் 50 ஆராய்ச்சிகள்... புதின் சொல்வது என்ன?

தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவராக இருந்தபோது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில தலைவராக இருந்த எல் முருகன், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர்கள் பாஜக மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 3ஆக இருந்தது.

ஆனால் அண்ணாமலை மாநில தலைவராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீகிதம் 3ல் இருந்து 16 ஆக உயர்ந்தது. அப்படி இருக்கையில், அண்ணாமலைக்கு 6 மாதங்கள் கடந்தும் இதுவரை முக்கிய பொறுப்போ, பதவியோ எதுவும் வழங்கப்படவில்லை என்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆதவாளர்களுக்கு மட்டுமல்லாது அண்ணாமலைக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கின்றன கமலாலய வட்டாரங்கள்.

 நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன்
நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன்x

ஏற்கனவே, டெல்லியில் தமிழக பாஜக தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில் இந்த கூட்டத்தைப் புறக்கணித்திருந்தார் அண்ணாமலை. அதேபோல துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற விழாவில் கலந்துகொள்ள அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அதையும் புறக்கணித்திருந்தார் அண்ணாமலை.

அண்ணாமலை
அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. சில நிமிடங்கள் தனியாக நடந்த ஆலோசனை

இதனால் பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கின. ஆனால் “எனக்கு பாஜக தலைமை மீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. சிலர் பரப்பும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. என்னைச் சுற்றி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே தலைமை மீது அதிருப்தி உள்ளது என போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் அது முற்றிலும் தவறு. நான் கட்சித் தலைமை மீது முழு நம்பிக்கையுடனும், உறுதிப்பாட்டுடனும் உள்ளேன்” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

ஆனாலும், இன்று சென்னையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகளுக்கான சிந்தனை அமர்வு கூட்டத்தையும் அண்ணாமலை புறக்கணித்ததாகக் கூறப்பட்ட நிலையில் இதை அறிந்து கொண்ட பி.எல்.சந்தோஷ் ஆலோசனை தொடங்கும் முன்பே அக்கரையில் இருந்து பனையூர் சென்று அண்ணாமலையை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

அண்ணாமலை
ஆயுதபூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள்: தெற்கு, மேற்கு மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு

அப்போது அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் தனக்கு முக்கியப் பதவிகள் இதுவரை வழங்கப்படவில்லை என்பது உள்ளிட்ட தனது அதிருப்திக்கான காரணங்களை பி.எல். சந்தோஷிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் கருத்துகளை முழுவதுமாக கேட்டறிந்த பி.எல்.சந்தோஷ் அது குறித்து தேசியத் தலைமையிடம் பேசித் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார் எனவும் இதில் சமாதானம் அடைந்த அண்ணாமலை பிற்பகலில் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்து பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிற்பகல் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த அண்ணாமலையை நிர்வாகிகள் முன்பு இரண்டாம் அமர்வில் உரையாற்ற வைத்துள்ளார் பி.எல்.சந்தோஷ்.

மேலும் அண்ணாமலைக்கான முக்கியத்துவம் தற்போது வரை குறையவில்லை என்பதை நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறும் விதமாக நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை அண்ணாமலை மூலமே வெளியிட வைத்துள்ளார் பி.எல்.சந்தோஷ். இதன் மூலம் கட்சித் தலைமை மீது கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்த அண்ணாமலை தற்காலிகமாக சமாதானம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது..

அண்ணாமலை
இந்தியா - அமெரிக்கா | 6-ம் கட்ட பேச்சுவார்த்தை; டோனை மாற்றியுள்ள ட்ரம்ப்... நவரோவின் நகர்வு என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com