தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வேpt web

ஆயுதபூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள்: தெற்கு, மேற்கு மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
Published on

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்படவுள்ளது. மறுமார்க்கத்தில், செப் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில், மாலை 3.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் புறப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு, செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அன்றைய தினங்களில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படவுள்ளது. மறுமார்க்கத்தில், செப் 26, அக்டோபர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில், மாலை 6.30 மணிக்கு போத்தனூரில் இருந்து சிறப்பு ரயில் புறப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு, செப் 24, அக்டோபர் 1, 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில், மாலை 3.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில், செப் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே
ஆரோவில் அறக்கட்டளைக்கான நிதியை பலமடங்கு உயர்த்திய மத்திய அரசு..

அதேபோல், திருநெல்வேலி மற்றும் சென்னை எழும்பூர் இடையே செப் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் செப் 26, அக்டோபர் 3,10,17, 27 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி சென்னை எழும்பூர் இடையே, செப்டம்பர் 29, அக்டோபர் 6,13, 20, 27 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகர்கோவில் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே, செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, புதனன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே
இந்தியா - அமெரிக்கா | 6-ம் கட்ட பேச்சுவார்த்தை; டோனை மாற்றியுள்ள ட்ரம்ப்... நவரோவின் நகர்வு என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com