\
விஜய் - Z+ பாதுகாப்பு
விஜய் - Z+ பாதுகாப்புPTI

முதல்வர் விஜய்க்கு இஸட்+ பாதுகாப்பு.. இந்தியாவின் எஃகு கவசம்.. சிறப்பம்சங்கள் என்ன?

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பாதுகாப்பு வளையமான இஸட் ப்ளஸ்ன் சிறப்பம்சங்கள் என்னென்ன.. பார்க்கலாம்..
Published on

இந்தியாவின் தனிநபர் பாதுகாப்பு கட்டமைப்பில் Z+ பிரிவு என்பது மிக உயரிய அடுக்காகும். ஒரு நபரின் உயிருக்கு மிக அதிகமான மற்றும் நம்பகமான அச்சுறுத்தல் இருப்பதாக அரசு கருதினால் மட்டுமே இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 55 அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் கொண்ட குழு, இந்த பாதுகாப்புப் பிரிவில் இடம்பெறும். இதில் கமாண்டோக்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் அடங்குவர். தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் போன்ற உயரடுக்கு படைகளில் இருந்து இந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

Z+ பிரிவு பாதுகாப்பு
Z+ பிரிவு பாதுகாப்புPTI

அந்தப் பிரமுகருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும். அவரது வீடு, பயணம், பொது நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியா முழுவதும் அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் இந்தப் பாதுகாப்புத் தொடரும். சமீபகாலமாக, NSG கமாண்டோக்களை பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பெரும்பாலான Z+ பாதுகாப்பிற்கு இப்போது CRPF அல்லது CISF கமாண்டோக்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

Z+ பிரிவில் ஒரு குண்டு துளைக்காத கார், இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஒரு முன்னோடி வாகனம் ஆகியவை வழங்கப்படும். குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், சில மாநில முதலமைச்சர்கள் மற்றும் பெரும் அச்சுறுத்தல் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக, நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு வளையமாக Z+ கருதப்படுகிறது.

விஜய் - Z+ பாதுகாப்பு
"பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை" - ராகுல் காந்தி விமர்சனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com