முதல்வருடன் பேசியது என்ன? - கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விளக்கம்!
ஆர். முருகேசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்த பின்னர் சாதிய ஆணவக் கொள்கையை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை இல்லத்தில் சந்தித்தோம். தமிழ்நாட்டில் சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற செல்வகணேஷ் படுகொலை அதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் சாதி ஆணவக் கொலைகள் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் சாதிய ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்திருக்கிறோம்.
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் உடைய தேவையை தேசிய பெண்கள் ஆணையம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் வற்புறுத்தி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாடு அரசு சாதிய ஆணவக் கொலையை தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.
எங்களது விளக்கங்களை முதலமைச்சர் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார். சமூகத்தில் இத்தகைய சாதிய மேலாக்க சக்திகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்தியா முழுவதும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலும் அதிகமான சாதி ஆணவக் கொலை நடைபெறுகிறது. சாதிய ஆணவக் கொலைகள் சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த சட்டத்தை சாதிய ஆணவக் கொலைகளை தடுக்கக்கூடிய புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.” என்றார்.
” சாதிய ஆணவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கவலைக்குரியது. சாதிய ஆணவ படுகொலை என்று சொல்லுகிற போது பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பிற்படுத்தப்பட்டவர் என்ற நிலையை சேர்ந்தவர் என்பதனால் படுகொலை நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாடு பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்பதை மறுக்க முடியாது. சாதிய ஆணவ படுகொலை அதிகரித்து வருவது ஒரு முற்போக்கான மாநிலத்திற்கு அழகல்ல. மக்களிடம் இது குறித்து தெளிவு வரவேண்டும் என்றாலும் சட்ட ரீதியாக இதை தடுக்க வேண்டும் என்கிற முறையில் மூன்று கட்சிகளும் சேர்ந்து மூவரும் கையெழுத்திட்டு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். விரைவான சட்டம் நிறைவேற்றுவது என்பது நல்லது. ஆணவத்தோடு இருக்கக்கூடியவர்கள் அச்சத்தை உருவாக்கக் கூடிய வகையில் இந்த சட்டம் பயன்பெறும் என்று முதலமைச்சரிடம் விரிவாக கூறியிருக்கிறோம். ” என்றார்.
” ஏற்கனவே இருக்கிற சட்டம் போதுமானது புதிய சட்டம் தேவை இல்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று புதிய சட்டம் சிறப்பு சட்டம் தேவை என்பதை கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு அமைப்புகள் ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகிறது.
இன்று முதலமைச்சரை சந்தித்து பேசியபோது , இந்தியச் சட்ட ஆணையம் புதிய சட்டம் தேவை என்று தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்திருக்கிறது. 2012 இல் சட்ட ஆணையம் சிறப்பு சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2015இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தனி நபர் சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. உயர் நீதிமன்ற நீதி அரசர் ராமசுப்பிரமணியன் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார். 2017 மாநிலங்களவையில் ஆணவக் கொலையை தடுக்க புதிய சட்டம் தேவை என்று சட்ட மசோதா தாகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் முதலமைச்சருக்கு விளக்கி சுட்டி காட்டி இருக்கிறோம்.முதலமைச்சர் இதனை பரிசளிக்க வேண்டும்.
இது எஸ்சிஎஸ்டி பிரச்சனை அல்ல ஒட்டுமொத்த சமூக பிரச்சனை. எல்லா சாதியினரிடேயும் காதல் திருமணம் நடந்தால் இது போன்ற படுகொலை நடக்கின்றன. இந்தியா முழுவதும் நடக்கிற இத்தகைய ஆணவக் கொலைகளுக்கு தேசிய அளவில் சட்டம் வேண்டும் என்றால் கூட மாநில அளவில் சட்டம் ஏற்றுக் கொள்ள அதிகாரம் இருக்கிறது என்றுதான் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம்.
ஒன்பதாம் தேதி சாதிய ஆணவக் கொலையை கண்டித்து ஒன்பதாம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். 11ஆம் தேதி தமிழக முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு அரசை இருக்கிற சட்டங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்கள். ஏற்கனவே இருக்கிற சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளை முதலமைச்சர் பாரபட்சமில்லாமல் மேற்கொண்டு வருகிறார் என நம்புகிறோம்.
எங்கள் கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இது குறித்து நிச்சயம் பேசுவார்கள்” என்றார்.