இணைய தளம் முடங்குவது, செல்போன் இணைப்பு துண்டிப்புfb
தமிழ்நாடு
ரஷ்யா|இணைய தளம் முடங்குவது, செல்போன் இணைப்பு துண்டிப்பு.. என்ன திட்டம்?
இணையத்தை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் இணைய தளம் முடங்குவது, செல்போன் இணைப்பு துண்டிப்பு போன்ற பல புகார்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால், இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு அல்ல என்றும், இணையத்தை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள், மக்களின் தகவல் பெறும் சுதந்திரம் மற்றும் கருத்துரிமை ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நட்புறவு இல்லாத நாடுகளின் இணைய சேவைகளை முடக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அரசின் இந்த அணுகுமுறை படிப்படியாக ரஷ்ய இணையத்தை உலகத்திலிருந்து தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன.