கூட்டணியில் நிறைவடைந்த தொகுதிப்பங்கீடு; திமுக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது. அந்த தொகுதிகள் தவிர்த்து திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் எவை?
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்pt web

தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாஜக மற்றும் அதிமுக தங்களது கூட்டணிகளை இதுவரை இறுதி செய்யாத நிலையில், தொகுதி பங்கீட்டையே இறுதி செய்துள்ளது திமுக.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் ஸ்டாலின்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் ஸ்டாலின் pt web

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின்
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்; வேட்பாளர்கள் யார் யார்? உத்தேச பட்டியல் இதோ...

காங்கிரஸ், மதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த நிலையில், காங்கிரஸ், மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடும் நேற்று கையெழுத்தானது. இதன்படி மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, திருச்சியில் போட்டியிடுகிறார்.

திமுக - அண்ணா அறிவாலயம்
திமுக - அண்ணா அறிவாலயம்கோப்புப்படம்

இதனை தொடர்ந்து அந்த 19 தொகுதிகள் தவிர்த்த 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அவை -

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, தூத்துக்குடி, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர், தென்காசி, தேனி, ஆரணி, அரக்கோணம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், காஞ்சிபுரம், பொள்ளாச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர்

ஆகியவை. இத்தொகுதிகளில் திமுக தங்கள் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இங்கே யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புள்ளது? கீழ் இணைக்கப்படும் லிங்க்-ல் அறியலாம்...

முதலமைச்சர் ஸ்டாலின்
“இவர்களாக இருக்குமோ?” - மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com