காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்; வேட்பாளர்கள் யார் யார்? உத்தேச பட்டியல் இதோ...

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகள் எவை? யார், யார் வேட்பாளர்களாக களமிறக்கப்படலாம் என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி.
காங்கிரஸ் வேட்பாளர்கள் (உத்தேசம்)
காங்கிரஸ் வேட்பாளர்கள் (உத்தேசம்)pt web

தமிழகத்தில் முதற்கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது. இதற்காக கூட்டணியை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகைபுதிய தலைமுறை

ஏற்கனவே தொகுதிகள் எண்ணிக்கை முடிவான நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் எவை என்பது குறித்த இறுதி முடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளான திருவள்ளூர், கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகியவை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி, தோல்வியடைந்த தேனி ஆகிய தொகுதிகள் தற்சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய எம்.பி.களான விஜய் வசந்த், மாணிக்கம் தாக்கூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார் ஆகியோருக்கு அவர்களின் தொகுதிகளான முறையே கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, கரூர், கிருஷ்ணகிரி ஆகியவையே ஒதுக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் (உத்தேசம்)
‘இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமா?’ - வெளியான காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல்

தனித்தொகுதியான திருவள்ளூரில் தற்போதைய எம்.பி.யான ஜெயக்குமாருக்கு பதில், விஸ்வநாதன், ரஞ்சன் குமார், சசிகாந்த் செந்தில் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

சசிகாந்த்
சசிகாந்த்கோப்பு புகைப்படம்

மயிலாடுதுறை தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், பிரவீன் சக்கரவர்த்தி, மீரா ஹுசைன் ஆகியோர் பெயரும் அடிப்படுகிறது.

கடலூரில் கே.எஸ்.அழகிரி போட்டியிலாம் என்றும், திருநெல்வேலியில் பீட்டர் அல்போன்ஸ் அல்லது ராமசுப்பு களமிறக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது. புதுச்சேரியில் தற்போதைய மக்களவை உறுப்பினராக உள்ள வைத்தியலிங்கமே போட்டியிடுவார் என்றும் தெரிகிறது.

விருப்பமனு வழங்கலாம் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ள நிலையில், மார்ச் 21 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் ஆலோசனைக்குப்பின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com