செஞ்சி: ஏன் பள்ளிக்கு அடிக்கடி செல்வதில்லை என்று கண்டித்த பெற்றோர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு!

செஞ்சி அருகே ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுப்பதாக பெற்றோர் கண்டித்ததால், மாணவர் விபரீத முடிவு. போலீஸார் விசாரணை!
உயிரிழந்த மாணவன்
உயிரிழந்த மாணவன்புதியதலைமுறை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு. இவர் பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுத்த நிலையில், அவரது பெற்றோர் சந்துருவை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஏன் பள்ளிக்கு செல்வதில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, திட்டவும் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் சந்துரு, இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் உடனடியாக சந்துருவின் பெற்றோர், அவனை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், சந்துரு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

உயிரிழந்த மாணவன்
“வெள்ளநீரை அகற்றவில்லை” - அமைச்சர் சேகர் பாபுவை முற்றுகையிட்ட வண்ணாரப்பேட்டை மக்கள்! #Video

இதுகுறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏன் பள்ளிக்கு செல்வதில்லை என்று கேட்டதற்கு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் தோன்றினால், உரிய ஆலோசனை பெற்று புதிய வாழ்க்கையை தொடங்கலாம். தொடர்புக்கு.. +91-44-24640050. தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல. உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை.

உயிரிழந்த மாணவன்
மிக்ஜாம் புயல் பாதிப்புகள் - “இயல்புநிலை திரும்பும் வரை நிவாரணப் பணி தொடரும்” - பிரதமர் மோடி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com