\
Vijay’s New Cabinet: Sengottaiyan Portfolio Changed; Full List of Ministerial Departments
TN Governor, CMx page

விஜயின் புதிய அமைச்சரவை |செங்கோட்டையன் துறை மாற்றம்.. யார்யாருக்கு என்ன துறைகள்?

செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 23 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும், தவெகவைச் சேர்ந்த 21 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில், ஏற்கெனவே முதல்வர் விஜயுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 23 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும், தவெகவைச் சேர்ந்த 21 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு யார் யாருக்கெல்லாம் என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனப் பார்ப்போம்.

ஸ்ரீநாத் - மீன்வளத் துறை

கமலி - கால்நடை துறை

விஜயலட்சுமி - பால்வளத் துறை

ரஞ்சித்குமார் - வனத்துறை

வினோத் - வேளாண்மைத் துறை

ராஜீவ் - சுற்றுச்சூழல் துறை

ராஜ்குமார் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை

காந்திராஜ் - கூட்டுறவுத் துறை

மதன்ராஜா - குறு, சிறு மற்றும் தொழில் துறை

ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை

ராஜேஷ்குமார் - சுற்றுலாத் துறை

விஜய பாலாஜி - கைத்தறி, ஜவுளித் துறை

லோகேஷ் தமிழ்ச்செல்வன் - வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை

விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்துத் துறை

ரமேஷ் - இந்து சமய மற்றும் அறநிலையத் துறை

விஸ்வநாதன் - உயர்கல்வித் துறை

குமார் - தகவல் தொழில்நுட்பத் துறை

தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை

சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

முகமது பர்வஸ் - தொழிலாளர் நலத் துறை

சரத்குமார் - மனிதவள மேலாண்மைத் துறை

விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் கலால் துறை

Vijay’s New Cabinet: Sengottaiyan Portfolio Changed; Full List of Ministerial Departments
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை.. யாருக்கு என்ன துறைகள்? வெளியானது அறிவிப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com