\
Tamil Nadu CM Vijay Allocates Portfolios to New Ministers
அமைச்சர்கள்Pt web

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை.. யாருக்கு என்ன துறைகள்? வெளியானது அறிவிப்பு!

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது என பார்க்கலாம்.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்களில் முதல்வர் விஜயின் பதவியேற்பு விழா கடந்த மே-10 அன்று நடைபெற்றது. விஜயுடன் சேர்த்து என். ஆனந்த், ராஜ்மோகன், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 தவெக எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். எனினும், பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கபடாமலேயே இருந்து வந்தது. இந்தசூழலில் தான் இன்று, தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.

விஜய்
விஜய்

அதன்படி, தமிழக முதல்வர் விஜய்க்கு, பொது நிர்வாகம், காவல்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், சிறப்புத் திட்ட அமலாக்கம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சர் என். ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, வறுமை ஒழிப்பு மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாடு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

Tamil Nadu CM Vijay Allocates Portfolios to New Ministers
”விஜய் முதல்வரானதை ஒப்பிட்டு விமர்சிக்கிறார்கள்..” தொண்டர்கள் இடையே பேசிய பவன் கல்யாண்!

அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் மேம்பாடு, செய்தித் துறை போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அமைச்சர் அருண்ராஜுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரபுக்கு கனிம வளத்துறை மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு முதலீடு மற்றும் தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம், தேர்தல்கள், சிறைத்துறை மற்றும் சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu CM Vijay Allocates Portfolios to New Ministers
”வரலாறா? அல்லது வரைபடமா? பாகிஸ்தானே முடிவு செய்யட்டும்” - ஜெனரல் உபேந்திர திவேதி எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com