கூமாபட்டி
கூமாபட்டிpt web

என்னப்பா... கூமாப்பட்டிக்கு போவோமா?

’ஒரு பக்கம் மலையை பார்க்க காஷ்மீர் மாதிரியும், ஒரு பக்கம் கர்நாடகா மாதிரியும் இருக்குது இல்ல’ என்று அவர் பேசிய வீடியோ ட்ரெண்டானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் கூமாப்பட்டியை தேடத் தொடங்கியுள்ளனர்.
Published on

“என்னப்பா.. கூமாப்பட்டிக்கு போவோமா?” என்பதுதான் இணையத்தில் இப்போதைய ட்ரெண்டிங் ஆக இருக்கிறது. ஆற்று நீரில் இருந்தபடி “ஏங்க... தமிழ்நாட்லயே எங்க ஊர மாதிரி இடமே கெடயாதுங்க.. அவ்ளோ ஏன் உலகத்துலயே இப்படி ஒரு இடம் கிடையாது. இது ஒரு தனி தீவு” என்றபடி ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால், கூமாப்பட்டி எங்கதான் இருக்கு.. அப்படி என்ன ஸ்பெஷல் என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏதோ இரு கிராமம்
தமிழ்நாட்டில் ஏதோ இரு கிராமம்கோப்புப்படம்

ஒவ்வொருவருக்குமே தங்கள் ஊரின் பெருமையை பேச ஆரம்பித்தால் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்.. அந்த ஊரில் என்ன இருக்கிறதோ இல்லையோ.. ‘எப்பா, எங்க ஊர்லாம் எப்பேர்பட்ட ஊர் தெரியுமா.. சும்மா சொர்க்கம் மாதிரி இருக்கும்’ என்று சிலாகிப்பது வழக்கமான ஒன்றுதான். ஊரில் இருக்கும் வரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, வெளியூர் வந்து விடுமுறையில் சொந்த ஊர் சென்றால், ‘சொர்க்கமே என்றாலும், அது நம்மூர போல வருமா’ என்று ஸ்டேட்டஸ் போடுவார்கள்.

கூமாபட்டி
பருந்தாகுது ஊர்க்குருவி.. விமான சத்தத்தின் மீதான காதல் விண்வெளிக்கு இழுத்துச் சென்ற கதை!!!

இந்நிலையில்தான், கூமாப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ‘உலகத்திலேயே எங்க கூமாப்பட்டி மாதிரி ஒரு இடம் இல்ல.. புண்ணியம் நிம்மதிக்கு காசி, ராமேஸ்வரம் போறீங்களே.. எங்க ஊருக்கு வாங்க, இங்க குளிச்சாலே ஒரு புண்ணியம்.. லவ் failureஆ இங்க வாங்க, உங்க லவ் சக்சஸ் ஆகும்..” என்று தண்ணீரில் இருந்தபடி பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. சிறுவன் ஒருவன் தண்ணீரில் மூழ்காமல் இருக்க கேனை கட்டிக்கொண்டு நீந்த, இந்த நபரோ தண்ணீருக்குள் நின்றுகொண்டு தங்கள் ஊர் பெருமை குறித்து சிலாகித்து இருக்கிறார். ‘ஒரு பக்கம் மலையை பார்க்க காஷ்மீர் மாதிரியும், ஒரு பக்கம் கர்நாடகா மாதிரியும் இருக்குதுல்ல’ என்று அவர் பேசிய வீடியோ ட்ரெண்டானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் கூமாப்பட்டியை தேடத் தொடங்கியுள்ளனர்.

கூமாபட்டி
குபேரா - தெலுங்கில் சூப்பர் ஹிட்.. தமிழில் சுமார்.. காரணம் என்ன?

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த கூமாப்பட்டி தொடர்பான விவரங்கள் இதோ...

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் அழகிய எழில் கொஞ்சும் கிராமம்தான் கூமாப்பட்டி. பால்கோவாவிற்கு பேர் போன ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தண்ணீருக்கு பஞ்சமே இல்லை.. ஆற்று நீர் வற்றாமல் ஓடுவதால் விவசாயம் செழிக்கிறது. நெற்பயிர் நடவே இங்கு பிரதான பயிராக இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி சதுரகிரி மலை, சஞ்சீவி மலை உள்ளிட்டவை இருக்க, கூமாப்பட்டியின் பிரதான சுற்றுலாவாக பிளவக்கல் அணை இருக்கிறது.

பிளவக்கல் அணை
பிளவக்கல் அணை

2002ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையில் படகு சவாரி மற்றும் குழந்தைகள் பூங்கா இருக்கின்றன. சுற்றி மலைகள், பார்க்கும் இடமெல்லாம் பசுமை என்றிருந்த இடம் ஓவர் நைட்டில் ட்ரெண்டானதைத் தொடர்ந்து, அப்புறம் என்னப்பா கூமாப்பட்டி போவோமா என்று பலரும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் உள்ள ஒரு வெறிநாய் கடித்ததில் 40 பேர் காயமடைந்த நிலையில், பசுமாடுகளையும் நாய் கடித்துள்ளது. இதனால் வெறிநாய் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில்தான், சுற்றுலாவுக்கு பேர் போன இடமாக மாறி இருக்கிறது கூமாப்பட்டி.. அப்றம் ஒரு விஷயம்... கூமாபட்டி போற மக்களே.. இந்த நாய் பிரச்னைகள் கொஞ்சம் தீர்ந்துவிடட்டும்.. அப்றம் படையெடுத்து போகலாம். பொதுநலன் கருதி....

கூமாபட்டி
இது வடசென்னையின் கதை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் Back to Back Treat!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com