திருமாவளவன், வேங்கைவயல்
திருமாவளவன், வேங்கைவயல்pt desk

வேங்கைவயல் மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும் - திருமாவளவன்

பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக அரசின் செயல் திட்டங்களுள் ஒன்று. சோதனை முன்னோட்டமாக உத்தரகண்ட்டில் பொது சிவில் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறது- என்று திருமாவளவன் தெரிவத்தார்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை அம்பத்தூரில் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் 76வது குடியரசு தின கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்... 'பொது சிவில் சட்டம், நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக அரசின் செயல் திட்டங்களுள் ஒன்று. சோதனை முன்னோட்டமாக உத்தரகண்ட்டில் பொது சிவில் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பல்வேறு சதி முயற்சிகளை செய்கிறார்கள். சமூக பதற்றத்தை உருவாக்கும் விதமாக, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். இந்தியாவை மதத்தின் பெயரால், கட்டமைக்க வேண்டும் என்பது, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது ஏற்புடையது அல்ல.

யாருமே உள்ளே போகக் கூடாது என்கிற கெடுபிடி வேங்கைவயலில் நிலவுகிறது. இது ஜனநாயக உரிமையை பறிக்கும் நடவடிக்கையாக உள்ளது. தங்கள் மீதே வழக்கு போடப்பட்ட அதிர்ச்சியில், மக்கள் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்ப்பதற்கு வி.சி.க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, உள்ளே சென்றவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்துள்ளனர். தற்போது, வழக்கறிஞரையும் தடுத்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.

திருமாவளவன், வேங்கைவயல்
வாணியம்பாடி | திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் கைது - கர்நாடக காவல்துறைக்கு எதிராக போராட்டம்

இந்தப் போக்கினை, காவல்துறை மற்றும் அரசு கைவிட வேண்டும். வேங்கைவயல் மக்களை சந்திப்பது பற்றி முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். இந்த பிரச்னையில், காவல்துறை பதிவு செய்திருக்கக்கூடிய குற்றப்பத்திரிகை, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள சூழலில், ; அனைத்து எதிர்க் கட்சியினரும் விமர்சித்துள்ள சூழலில், தமிழக அரசு இது குறித்து, மீளாய்வு செய்ய வேண்டும்.

திருமாவளவன், வேங்கைவயல்
HEADLINES | ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து: மக்களின் நலனில் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி

இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதன் வாயிலாக, ஏற்படப் போகும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு, மாற்று நிலைப்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசே முன்வந்து, இந்த வழக்கை, சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். எங்களது கோரிக்கையை முதல்வர் பரிசிலிப்பார் என நம்புகிறேன்' என்று திருமாவளவன் தெரிவத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com