HEADLINES | ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து: மக்களின் நலனில் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்புக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து. மக்களின் நலன், பாதுகாப்பு போன்றவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என இரு நாட்டு தலைவர்களும் உறுதி.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக பிரித்து வைத்துள்ளனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. பட்டியல் இனத்திலிருந்து ஒருவர் முதலமைச்சராக வேண்டும் எனவும் கருத்து.
திண்டிவனத்தில் சாலையில் நடந்துச் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்.
சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். தமிழ்நாட்டில் பல ‘சார்’கள் பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாகவும் புகார்.
‘சார்’களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று, எதிர்க்கட்சி தலைவர் விமர்சனத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்.
வேங்கைவயலுக்குள் யாரையுமே அனுமதிக்காதது ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயல் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்.
பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்ற வரவில்லை, மக்களின் மனங்களை மாற்ற வந்திருக்கிறேன் என ஈரோடு தேர்தல் பரப்புரையில் சீமான் பேச்சு.
சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான 3 ரிட் மனுக்கள் தள்ளுபடி. விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவு.
கருங்குழி - பூஞ்சேரி இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம். சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை.
விவசாயிகளுக்கு அனைத்து மானியங்களையும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது குறித்து பரிசீலனை. மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தகவல்.
6 ஆண்டுகளுக்கு பிறகு கயிலாய யாத்திரையை மீண்டும் தொடங்க இந்தியா, சீனா ஒப்புதல். நேரடி விமானப்போக்குவரத்து தொடங்கவும் இரு நாட்டு வெளியறவுத்துறை செயலாளர்கள் சந்திப்பில் நடவடிக்கை.
அமைச்சர்கள் கும்பமேளாவில் குளித்தால் வறுமை நீங்கிவிடுமா என கேட்டது மூலம் மக்களை அவமதித்துள்ளார் மல்லிகார்ஜுன் கார்கே என பாஜக விமர்சனம். இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தல்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்.
பிரான்சில் தொடர்ந்து பொழியும் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்.
அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்ட நான்காயிரம் பேரில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என தகவல். பிற நாட்டினரையும் தங்கள் நாட்டுக்கு அமெரிக்க அரசு அனுப்புவதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா குற்றச்சாட்டு.