பிரபாகரன் - மாத்தையா விவகாரத்தோடு ஒப்பிட்டு மல்லை சத்யாவை விமர்சித்த வைகோ! அன்று நடந்தது என்ன?
தன்னுடைய சேனாதிபதி மல்லை சத்யா என பேசிவந்த வைகோ, தற்போது, பிரபாகரன் - மாத்தையா விவகாரத்தோடு ஒப்பிட்டு பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அப்போது என்ன நடந்தது, பிரபாகரனுக்கு மாத்தையா அப்படி என்ன செய்தார். கொஞ்சம் வரலாற்றின் பக்கங்களில் முன்செல்வோம்.
இலங்கையில் தனிநாடு கேட்டு போராடிய இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மாத்தையா. இவர், 1989ஆம் ஆண்டு அந்த அமைப்பால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார் இந்திய உளவு அமைப்பான 'ரா-வுக்கு அமைப்பின் ரகசியங்களை வெளியிட்டார் என்றும், அமைப்பின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டு, தலைமைப் பதவிக்கு வரத் திட்டமிட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார். பின்னாட்களில் அந்த அமைப்பால் மரண தண்டனையும் அவர் மீது விதிக்கப்பட்டது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து ஜர்னலிஸ்ட் நீனா கோபால் "The Assassination of Rajiv Gandhi" புத்தகத்தில் மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், 1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த போது, போராட்ட அமைப்புக்குள் ரா 'அமைப்பு ஊடுருவியது. 1989ம் ஆண்டு தொடக்கத்தில் RAW அமைப்பின் உளவாளியாக மாறுகிறார் மாத்தையா. அப்போது போராட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த பிரபாகரனை கொலை செய்துவிட்டு தலைமைப் பொறுப்பை ஏற்பதுதான் அவருக்குக் கொடுத்த அசைன்மெண்ட். 1993 ஆம் ஆண்டு மூத்த தளபதி கிட்டு வெளிநாடு ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கப்பல் குறித்த தகவலை ராவுக்குக் கொடுத்ததும் மாத்தையாதான். சென்னை அருகே சுற்றி வளைக்கப்பட கப்பலை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் கிட்டு.
கிட்டுவின் கப்பல் வரும் தகவலை மாத்தையாதான் இந்தியாவுக்கு காட்டி கொடுத்தார் என சந்தேகித்து அமைப்பால் அவர் கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டு டிசம்பரில் மாத்தையாவுக்கு அமைப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டது''எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.., அதாவது. அமைப்பின் தலைவரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்கு வரத் துடித்தவர் மாத்தையா என்பதுதான் இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாக ஈழ ஆதரவாளர்களால் துரோகி என வர்ணிக்கப்படுபவர் மாத்தையா. தற்போது அவரோடு மல்லை சத்யாவை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் வைகோ. அவர் வார்த்தையிலே சொல்வது என்றால், பிரபாகரனுக்கு மாத்தையா தான் விசுவாசமாக இருந்தவர். தமிழ் ஈழம் மலர்ந்தால், மாத்தையாவை தான் முதல்வராக்குவேன் என பிரபாகரன் என்னிடம் கூறினார்.
ஆனால், பிரபாகரனை கொலை செய்யும் சதி திட்டத்திற்கு, மாத்தையா உடன்பட்டார். அவரிடம், 'நீ எப்படி துரோகம் செய்தாய்' என, பிராபகரன் கேட்டார்.
என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு காலத்தில் நன்றாக உழைத்து விட்டு, பல போராட்டங்களில் பங்கேற்று விட்டு, இறுதியில் துரோகம் செய்தவர்களின் வரலாறை படித்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
ஆனால், வைகோவின் இந்த விமர்சனம் குறித்துப் பேசிய மல்லை சத்யா' துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார் என வருத்தம் தெரிவித்துள்ளார் மல்லை சத்யா....