வைகோ நடத்திய விழாவில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்...

மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தொண்டர்க ள் வெளியேறியதை படம்பிடித்த செய்தியாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்...

*சாத்தூரில் நெல்லை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் திடீர் தாக்குதல்*

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் மண்டபத்தில் மதிமுகவின் நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது. நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி குமரி தென்காசி உள்ளிட்ட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வைகோ பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த காலி நாற்காலிகளை செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும் பொழுது மதிமுக நிர்வாகிகள் எடுக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மதிமுகவினர் செய்தியாளர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com