”உதயநிதி ஸ்டாலினை கைதுசெய்தது 100-க்கு 100 சரி” - வைகோ பாராட்டு
காவிரி நீர் விவகாரத்தில் தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஜோசப் விஜயை குறித்து சர்ச்சைக்குரிய, தரம் தாழ்ந்த பேச்சு நடத்தியதாக தவெக மகளிரணி புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தஞ்சை காவல்துறை இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தது. இந்த நடவடிக்கையை மதிமுக தலைவர் வைகோ முழுமையாக ஆதரித்து, தமிழக அரசை பாராட்டியுள்ளார்.
செய்தியாளர் - M. மீரா
காவிரி நீர் விவகாரத்தில், தமிழக அரசின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று தஞ்சையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து அவர் மீது தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சை காவல்துறை, உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை கைது செய்தது.
கைது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மதிமுக தலைவர் வைகோ, யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று வள்ளுவர் கூறியுள்ளார். இன்று முதல்வர் ஜோசப் விஜய் குறித்து தரம் தாழ்ந்த முறையில் தன் தகுதியைக் குறைத்துக் கொண்டு இழி சொற்களை பயன்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது நூற்றுக்கு நூறு சரியே. தமிழக அரசுக்கு என் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். உதயநிதிக்கு என் கண்டனங்கள் தெரிவிக்கிறேன் என்று புதிய தலைமுறை டிஜிட்டலிடம் தெரிவித்துள்ளார்.

