வி.நாராயணன்
வி.நாராயணன்pt desk

“இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்படும்” - இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன்!

இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது என இஸ்ரோவின் தலைவராக நாளை பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: நவ்பல்அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில், இஸ்ரோவின் தலைவராக நாளை பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன், தனது குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்....

வி.நாராயணன்
வி.நாராயணன் pt desk

“மிகவும் முக்கியமான பொறுப்பை பாரத பிரதமர் வழங்கி உள்ளார். இதன் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய பெரிய வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பிரதமர் அறிவுறுத்தல் படி கூட்டு முயற்சி மூலம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

வி.நாராயணன்
சபரிமலை மகரஜோதி தரிசனம் - பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு

தற்போது இரண்டு செயற்கைகோள் டாக்கிங் என்பது வெற்றிகரமாக நடந்துள்ளது. இது எதிர்காலத்தில் சந்திரயான் 4 நிலவில் தரை இறங்க உள்ளது. அதற்கு இது பயன்பெறும். இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்காகவும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் இந்த டாக்கிங் தொழில்நுட்பம் பயன்பெறும்.

வி.நாராயணன்
வி.நாராயணன்pt desk

இந்த மாதம் நேவிகேஷன் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இது போன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் அளவிற்கு திறன் படைத்த ராக்கெட் ஒன்று தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

வி.நாராயணன்
தென்கொரியா | விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com