தென்கொரியாமுகநூல்
உலகம்
தென்கொரியா | விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!
தென்கொரியாவில் ஜெஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர். அந்த விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்தபோது, அதில் கடைசி நிமிடங்களில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படாதது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, இறுதி நேர தரவுகளை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தென்கொரியாவில் கடந்த டிச. 29 அன்று ஜெஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர். அந்த விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்தபோது, விபத்திற்குள்ளாவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்பே, கருப்பு பெட்டி தரவுகளையும், விமானிகளின் குரலையும் பதிவு செய்வதை நிறுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.