ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணிமுகநூல்

நெருங்கும் தேர்தல்.. பாமகவில் ஓயாத உட்கட்சி பூசல்.. தேர்தல் பேரத்தில் பெரிய இடியாக மாறுமா?

பாமக உட்கட்சி பூசல், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான மோதலால் தீவிரமடைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் நிலைமை மற்றும் கூட்டணி விவாதங்கள் கேள்விக்குறியாக உள்ளன.
Published on
Summary

பாமக உட்கட்சி பூசல், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான மோதலால் தீவிரமடைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் நிலைமை மற்றும் கூட்டணி விவாதங்கள் கேள்விக்குறியாக உள்ளன. காந்திமதியின் நியமனம், அன்புமணிக்கு எதிரான புதிய அஸ்திரமாக பார்க்கப்படுகிறது. இந்த உட்கட்சி பூசல், பாமகவின் தேர்தல் வெற்றியை பாதிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாமக-பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல்
அன்புமணி - ராமதாஸ்.pngஎக்ஸ் தளம்

ஒவ்வொரு தேர்தல் களத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பாமக தொடர்பான பேச்சு அதிக அளவில் அடிபடும். நீண்ட காலம் பேச்சுவார்த்தை நடத்தி தனக்கான இடங்களை, தான் இடம்பெறப்போகும் கூட்டணியிடம் பேசிப் பேசியே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உறுதி செய்துவிடுவார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம் ஆரம்பித்து பல மாதங்கள் ஆன நிலையிலும் பாமக கூட்டணி விவாதங்களிலேயே இல்லை. மாறாக பாமகவின் முழு கவனமும் தற்போது உட்கட்சி பூசலில் இருக்கிறது. ராமதாஸ் Vs அன்புமணி என தொடங்கிய அந்த உட்கட்சி பூசல் தற்போது அடுத்தக்கட்ட பரிணாமத்தை எட்டிவிட்டது போல் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் உட்கட்சி பூசலை பாமக இன்னும் கட்டுக்குள் கொண்டுவராமல் இருக்கிறது.

பாமக இதுவரை சந்தித்த தேர்தல்கள் குறித்தும் தற்போது கட்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

ராமதாஸ், அன்புமணி
Bihar Election | பிஹார் ஏன் வறுமையாக இருக்கிறது?

பாமக - தேர்தல் வெற்றி, தோல்விகள்!

தமிழகத்தில் ஒரு கட்சி தொடங்கப்பட்டு மூன்று தேர்தலில், பிரதான இருபெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றது என்றால் அது பாமக. பின்னர், 98-ல் அதிமுகவுடன் கூட்டணி. 5 தொகுதியில் போட்டியிட்டு 4 -ல் வெற்றி பெற்றது. பிறகு, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள, தி,மு,க-வுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு உருவானது. அப்போது, ஏழு தொகுதியில் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்று, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றது பாமக.

2001 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் வெற்றி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி என ஏறுமுகத்தைக் கண்ட பாமக, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டும் (அன்புமணி) வெற்றி என இறங்கு முகத்தையும் சந்தித்தது.

பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அறிவித்து தனித்துக் களம் இறங்கியது பா.ம.க. அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மிகப்பெரிய அளவில் அன்புமணி அப்பொழுது புரமோட் செய்யப்பட்டார். அவரது பரப்புரையே மிகவும் நவீனமாக இருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட பா.ம.க-வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும், 5.36 சதவிகித சதவிகித வாக்கை பா.ம.க தக்க வைத்தது.

ராமதாஸ், அன்புமணி
“2011ல் செய்த தவறுக்காக அனுபவிக்கிறார் ஓபிஎஸ்” – வைகோவின் புதிய குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

ஆனால், மீண்டும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது பா.ம.கவின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது. அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவும் முடியவில்லை. தொடர்ந்து, 2021 தேர்தலில், அதே கூட்டணியில், 23 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் வெற்றிபெற்றது. தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக அல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பத்து இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. 4.4 வாக்கு சதவிகிதத்தைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

உட்கட்சி பூசல் வெடித்தது எப்பொழுது?

Ramadoss and Anbumani Ramadoss
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்pt web

2021 சட்டமன்ற தேர்தல் வரையிலும் பாமகவில் எல்லாமும் நன்றாகவே சென்றது. ஆனால், ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.கவின் இளைஞரணி தலைவராக நியமிப்பது என ராமதாஸ் முடிவு எடுத்த பின்னர் கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பம் கிளம்பியது. அன்புமணி மேடையிலேயே தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது முதல் உலகின் கண்களுக்கு இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், தலைவர் பொறுப்பில் தானே தொடர்வதாக அறிவித்தார்.

அன்புமணி தரப்பினரை ராமதாஸ் நீக்குவதும் அதற்கு பதிலடியாக அவர்களை மீண்டும் கட்சிக்குள் இருக்கும் படியாக அன்புமணி தரப்பு பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாக இருந்தது. பொதுவெளியில் அன்புமணி குறித்து மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி தரப்பினர் நேரடியாக ராமதாஸை நேரடியாக விமர்சிக்காமல் அவரை சுற்றியுள்ள ஜி.கே.மணி., எம்.எல்.ஏ அருள் உள்ளிட்டோரை டார்கெட் செய்து விமர்சித்து வந்தனர். ஜூலை 25 முதல் மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கி அன்புமணி அதில் கவனம் செலுத்தி வந்தாலும், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் உச்சத்துக்கு சென்றது.

ராமதாஸ், அன்புமணி
சசிகலா முதல் செங்கோட்டையன் வரை.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட 14 பேர்.. யார்யார்?

அதிமுக உடனா? பாஜக உடனா?

2024 தேர்தலில் யாருடன் கூட்டணி செல்வது என்ற கருத்து வேறுபாடும் இந்த பிரச்னைக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுக உடன் செல்ல ராம்தஸும், பாஜக உடன் செல்ல அன்புமணியும் நினைத்தார்கள். அந்த நேரத்தில் தனக்கு தெரியாமலே பாஜகவுடன் கூட்டணியை அன்புமணி முடித்துவிட்டதாக ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால், ராமதாஸின் ஒப்புதல் உடனே கூட்டணி முடிவு செய்யப்பட்டதாக அன்புமணி தெரிவித்தார். கட்சியில் நிர்வாகிகள் கணிசமானோர் அன்புமணி இடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொண்டர்கள் தரப்பு ராமதாஸ் ஆதரவு மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பல பரிணாமங்களை எடுத்து உட்கட்சி பூசல்!

ராமதாஸ் - அன்புமணி மோதல்
ராமதாஸ் - அன்புமணி மோதல்புதிய தலைமுறை

ராமதாஸ் தரப்பில் அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்த நிலையில், அன்புமணி தரப்போ இதை அடுத்தடுத்த நிலையில் வைத்து விவாதித்து வருகிறார்கள். முதலில் அன்புமணியின் அக்கா மகன் முகந்தன் மீதிருந்து இது தொடங்கியது. பின்னர், இந்த பிரச்னையின் பின்னணியில் திமுக இருப்பதாக தொடர்ந்து அன்புமணி தரப்பு சாடி வந்தது. பின்னர், ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் மீது அவர்களின் பார்வை திரும்பியது. தற்போது, பாமக எம்.எல்.ஏ அருள்தான் பிரச்னைக்கு முக்கியக் காரணம் என்று அன்புமணி தரப்பினர் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

வெறும் கருத்து மோதல்களை தாண்டி களத்தில், வீதியில் சண்டையிட்டு கொள்ளும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. பல இடங்களில் இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொண்டது இதன் தீவிரத் தன்மையை எடுத்துக் காட்டியது. அதுவும், சமீபத்தில் சேலத்தில் எம்.எல்.ஏ அருள் தரப்பினருக்கும், அன்புமணி தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலானது பாமகவின் தற்போதையை நிலைமையை பளிச்சென்று சொல்லியது. அதுவும், கட்டைகள் கொண்டும் கற்களை கொண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பாமக மீது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

ராமதாஸ், அன்புமணி
Bihar Election | பிஹார் சொல்லும் சேதி பெண்களின் எழுச்சி!

ராமதாஸ் எடுத்துள்ள புதிய அஸ்திரம்! அடுத்து என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்pt web

ராமதாஸ் Vs அன்புமணி மோதலின் அடுத்த பரிணாமமாக காந்திமதி நியமனம் பார்க்கப்படுகிறது. ஆம், தன்னுடைய மூத்த மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக ராமதாஸ் நியமித்திருக்கிறார். இதற்குமுன் அன்புமணியை செயல் தலைவராக நியமித்து பின்னர் நீக்கியிருந்தார். அன்புமணியை முழுவதுமாக நிராகரித்துவிட்டு அடுத்த தலைமையாக காந்திமதியை முன்னிலைப்படுத்தி வருகிறார் ராமதாஸ். காந்திமதியும் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கியிருக்கிறார். சேலம் மோதல் சம்பவத்தில் எம்.எல்.ஏ அருள் குடும்பத்தினரையும் அவர் தரப்பினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் காந்திமதி.

காந்திமதியின் வரவு மேலும் அன்புமணிக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பாமக தற்போது வரை உட்கட்சி பூசலில் மூழ்கி கிடக்கிறது. பாமக என்றாலே உட்கட்சி பூசலே அனைவரும் நினைவிற்கும் வரும் நிலையில், ஊர் ஊராக சென்று அன்புமணி தன்னுடைய பரப்புரையை மேற்கொண்டு வருவது எந்தளவுக்கு பலன் கொடுக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரிய வரும்.

இந்த உட்கட்சி பூசலானது பாமகவின் தேர்தல் பேரத்தை நிச்சயம் பாதிக்கும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை பாமக இழந்து நிற்கிறது. அந்த வகையில் எதிர்பார்க்கும் இடங்களை பாமகவால் பெற முடியுமா என்பது சந்தேகம் தான். அப்படியே செய்ய வேண்டும் என்றாலும் டிசம்பருக்குள் கட்சியின் அனைத்து பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பாமகவின் வாக்குசதவிதம் 6-க்கு மேல் இருந்தால் தான் அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

ராமதாஸ், அன்புமணி
சுடும் வார்த்தைகள்.. கற்றோர் நிறைந்த தமிழ் சமூகத்தில் இவ்வளவு பிற்போக்கா?

பாமக முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?

கடைசியாக நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அதிமுக - தேமுதிக உடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. ஆனால், 2026 தேர்தலையொட்டி அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால், பாஜக உடன் கூட்டணியில் இருந்த பாமக இதுவரை கூட்டணி நிலைப்பாடை உறுதி செய்யவில்லை. தற்போது பாமக முன் இருக்கும் முதல் வாய்ப்பு அதிமுக - பாஜக கூட்டணில் இடம்பெறுவது. இதற்குதான் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. 2021 தேர்தலில் 24 இடங்கள் பெற்றிருந்த நிலையில் தற்போது அதைவிட கூடுதலாக கேட்டு பெற முயற்சிக்கலாம்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்அன்புமணி

அடுத்த வாய்ப்பு தவெக., நாட்கள் செல்ல செல்ல தவெக முன்னணி போட்டியாளராக உருவெடுத்தால் அந்த கூட்டணியில் இடம்பெற பாமக நினைக்கலாம். அதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றாலும் நடக்காது என்று சொல்ல முடியாது. தனித்து நிற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இதுஒரு புறம் இருக்க அன்புமணி தரப்பு அதிமுக - பாஜக கூட்டணியை நெருங்கும் நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவை நெருங்குவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால், உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.

ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி இருந்தால்தான் கூட்டணி உட்பட எல்லாம் பாமகவுக்கு சாதகமாக அமையும். இல்லையென்றால் அதிமுகவின் நிலைதான் பாமகவுக்கும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com