\
TVK Ministers Aadhav Arjuna, Maria Wilson Join INDIA Bloc Meet
கோப்புபடம்PTI

இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.. முதல்முறையாக பங்கேற்கிறது தவெக!!

I.N.D.I.A கூட்டணி தலைவர்களின் ஆலோசனையில் முதல்முறையாக தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
Published on: 

இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் போது, 14 ஆட்சேபனைகளை தெரிவித்ததாகவும், ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் எஸ்.ஐ.ஆர்-ன் போது நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் இணைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஞானேஷ் குமார்
ஞானேஷ் குமார்pt web

அதன்பகுதியாக, டெல்லியில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, அக்டோபர், 2-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அந்தவகையில், டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

TVK Ministers Aadhav Arjuna, Maria Wilson Join INDIA Bloc Meet
ஜந்தர் மந்தரில் கூடும் இளைஞர்கள்? மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள்! தலைநகரில் தீவிர பாதுகாப்பு!

இதன் தொடர்ச்சியாக, ஞானேஷ்குமாருக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்காக, சென்னை சத்திய மூர்த்தி பவனில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, இண்டியா கூட்டணியில் திமுக அங்கம் வகித்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தவெக இணைந்து விட்டதால், இண்டியா கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது திமுக.

இந்தச்சூழலில் தான், தற்போது இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்றிருக்கிறது. தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

TVK Ministers Aadhav Arjuna, Maria Wilson Join INDIA Bloc Meet
உ.பி | சாதியைக் காரணம் காட்டி சிகிச்சைக்கு அனுமதி மறுப்பு.. சாலையில் நடந்த பிரசவம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com