\
Youth gather at Jantar Mantar: Metro stations closed; high security
delhi cjp protestsani

ஜந்தர் மந்தரில் கூடும் இளைஞர்கள்? மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள்! தலைநகரில் தீவிர பாதுகாப்பு!

டெல்லியில் இளைஞர்கள் இன்று போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில்... ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, டெல்லி மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்சேபனைகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பானதாகக் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொள்ளாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்... இல்லையென்றால் நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

CJP to Launch Second Phase of Protest Soon
Abhijit DipkeANI

இதேபோல், இந்தியா கூட்டணி கட்சிகளும் அக்டோபர் 2-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தன. அனைத்திந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால்... இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதிலும், ஏராளமானோர் ஜந்தர் மந்தரில் கூட வாய்ப்பிருப்பதால், மத்திய டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரை போராட்டத்தில் பங்கேற்கலாம் என போலீஸ் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டப் பகுதியைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், முக்கியமான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல்... சுமார் 4,000 போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ஆயுதக் காவல் படையின் குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் பகுதியில் மட்டுமல்லாமல்... டெல்லியின் முக்கிய நுழைவுப் பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்... போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்கு அதிக அளவில் திரள்வதைத் தடுக்கும் வகையில், டெல்லி மெட்ரோவின் 11 நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

Students Protests in Jharkhand CJPs Next Big Move
Jharkhand protestReuters

டெல்லி புதிய மாவட்டத்தில் பாரதிய நாகரிக பாதுகாப்புச் சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடையுத்தரவும் அமலில் உள்ளது. இதன்படி, உரிய அனுமதியின்றி கூட்டம் கூடுதல், போராட்டம், பேரணி உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே... நீட் தேர்வு விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், 2026 ஜூலை மாதம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில்... மீண்டும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தலைநகரில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Youth gather at Jantar Mantar: Metro stations closed; high security
ராமர் கோவில் முறைகேடு புகார் எதிரொலி.. நன்னடத்தைச் சான்றிதழ் கோரும் அறக்கட்டளை! சிக்கலில் ஊழியர்கள்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com