விஜய்
விஜய்Pt web

"விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் தான் போட்டியே” - வேலூரில் விஜய் பேச்சு!

தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கு நேரில் வந்து மக்களை சந்திப்பேன் என வேலூரில் நடைபெற்றக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
Published on

வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. 4,900 மட்டுமே இக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி சீட்டு இல்லாத தவெகவினர் பலர் அங்கு கூடியிருந்ததை பார்க்கமுடிந்தது. இந்த நிலையில், 12 மணியளவில் விஜய் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் ஏறிய அவர் அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசத்தொடங்கினார். அப்போது பேசிய அவர், வழக்கம்போல திமுகவை விமர்சனங்களுடன் பல விஷயங்களைக் குறித்துப் உரையாற்றியிருக்கிறார்.

விஜய்
விஜய்Pt web
அனைத்துக் கிராமங்களுக்கும் நேரில் வருகிறேன்.

இக்கூட்டத்தில் பேசிய விஜய், ”உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நமது ஆட்சி அமைந்ததும் தமிழகத்தின் அனைத்துக் கிராமங்களுக்கு நேரில் வந்து மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளேன். முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை தமிழகத்திற்கும் டெல்லிக்குமான போர் எனக் கூறியிருக்கிறார். இது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. எந்த தேர்தலை எப்படி அணுக வேண்டும் என தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். உண்மையில் இந்த தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுகவும் நடக்கும் போர்; லஞ்சத்துக்கும் திமுகவுக்கும் நடக்கும் போர்; சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர்.

விஜய்
தொகுதிப் பங்கீடு | ”உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம்” - மமக தலைவர் ஜவாஹிருல்லா!
50 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் போல

திமுக ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இல்லை. சூப்பர் ஸ்டேண்ட் அப் காமெடிக்காரர் ஆட்சி நடத்தும் மாநிலமாக இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல் வேறு, தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் வேறு. 50 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் போல, இது அதிசயத் தேர்தல். தேர்தலில், அவரவர்களுடைய எதிர்களைத் தான் எதிப்பார்கள். ஆனால், இந்த முறை அனைவரும் சேர்ந்து ஒருவரை மட்டுமே எதிர்க்கிறார்கள். விஜயை மட்டுமே எதிர்க்கிறார்கள். ஏனென்றால், லஞ்சத்துக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக நான் மட்டும் தான் கேள்வி கேட்கிறேன். எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்யும் செயல் மாதிரி. விஜயும் மக்களும் வேறுவேறு கிடையாது. இருவரும் ரத்தமும் சதையும் போல இரண்டலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது” என கடைசியில் எமோஷனலாக பேசிய அவர் சில விநாடிகளுக்கு மேடையிலேயே கண்கலங்கினர். அப்போது, இதைக்கண்ட தவெக நிர்வாகிகள் உற்சாகம் செய்யும் படி குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் பேசத்தொடங்கினார்.

NGMPC059
கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் பழியை எப்படி என் மீது போட முடிந்தது.

தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் திமுகவுக்கு தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி. இதை நாம் கூறும்போது, சிலர் தானகவே வந்து வண்டியில் ஏறுகிறார்கள். சீரியஸான போட்டி நடைபெறும்போது, காமெடிக்கு வேலை கிடையாது. சமீபத்தில் எங்களுக்கு யாரும் எதிரிகள் கிடையாது நண்பர்கள் என திமுகவினர் பேசுகிறார்கள். அப்படி நாங்கள் நண்பர்களாக இருக்கும்போது, எப்படி கரூர் துயரத்தின்போது எங்கள் மீது பலியைத் தூக்கி உங்களால் போட முடிந்தது. உங்களுக்கு நண்பன் ஊழல் மற்றும் லஞ்சம் மட்டுமே” எனத் தெரிவித்தார்.

விஜய்
வேலூர் | விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு.. பாதுகாப்பு பணியில் 900 போலீசார்!

அண்ணாவை மேற்கோள் காட்டிய விஜய்!

தொடர்ந்து, ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் ஆட்சியதிகாரம் சார்ந்தது மட்டுமல்ல. சிறுபாண்மை மக்களின் உரிமைகள், உணர்வுகள் ஆகியவற்றை காப்பது தான் என அண்ணா கூறியது தான் தவெகவுடன் நிலைபாடுதான். மதசார்பற்ற சமூகநீதியில் மாற்றமே கிடையாது என முன்னாள் முதல்வர் அண்ணா பேசியதை மேற்கோள் காட்டிப் பேசினார்.

திமுகவை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.

தற்காலப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதாக கூறி பேசிய அவர், மின்கட்டணம் மாதத்திற்கு ஒருமுறை கட்டும் நடைமுறை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரைக் கொண்டு வரப்படவில்லை. தமிழகப் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் we are not safe எனக் கூறுகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய்விட்டது. இந்த விஷயங்களுக்கு முடிவுகட்டவேண்டுமென்றால், திமுகவை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

விஜய்
விஜய்Pt web

வாக்குறுதிகள் அறிவித்த விஜய்

தொடர்ந்து, “நம் ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பு நம்பர் ஒன்னாக இருக்கும். சட்டம் ஒழுங்கு கடினமாக இருக்கும். போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். அரசுப் பள்ளிகள் கல்லூரிகள் எல்லாம் தரமாக இருக்கும். உயர்கல்வியில் அடிப்படை அரசியல் சாசன பாடப்பிரிவு சேர்க்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பாடத்திட்டத்திலேயே பயிற்சி. மாவட்ட ஆட்சியர், எஸ்பி நியமனங்களில் சரிபாதி பெண்கள். பேருந்து போக்குவரத்துக்கு தட்டுப்பாடே இல்லாத நிலை. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், அவர்களின் நலன், குடும்ப நலனுக்காக வாரியம். தென் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க கவனம் செலுத்தப்படும்” போன்ற வாக்குறிகளை தனது உரையின் கடைசியி தவெக தலைவர் விஜய் கொடுத்திருக்கிறார்.

விஜய்
கூட்டணியில் தொகுதிகளை குறைக்கும் திமுக.. மேலும் கட்சிகளை இணைக்க திட்டம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com