திமுக கூட்டணி
திமுக கூட்டணிPt web

கூட்டணியில் தொகுதிகளை குறைக்கும் திமுக.. மேலும் கட்சிகளை இணைக்க திட்டம்?

தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள திமுக, கூட்டணிக் கட்சிகளின் இடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
Published on
Summary

முஸ்லிம் லீக் 5 இடங்கள் கேட்ட நிலையில், திமுக 2 இடங்கள் மட்டுமே தர முன்வந்துள்ளது. இதனால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு இடங்கள் குறைவாக கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம் இருந்து தொடங்கியுள்ளது திமுக. அதன்படி, திமுக தேர்தல் குழுவுடன், காதர் மொகிதீன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பொருட்டு அனைத்து கட்சிகளுக்கும் இடங்கள் குறைவதாக திமுக சொன்னதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் கூறியிருந்தனர். அதாவது 2021இல் 3 இடங்களில் போட்டியிட்ட முஸ்லிம் லீக், தற்போது 5 இடங்கள் வேண்டும் என திமுகவிடம் கேட்டதாகவும், ஆனால், திமுக தரப்பு 2 இடங்கள் மட்டுமே தர முன்வந்திருப்பதாகவும், காதர் மொகிதீன் கூறியிருந்தார்.

காதர் மொகிதீன்
காதர் மொகிதீன்Pt web

அதேநேரம், இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வருத்தப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால், அதன் பங்கு எல்லோருக்கும் கழிகிறதா என அனைவரது கண்களும் அறிவாலயம் நோக்கி திருப்பியுள்ளது. இதனால், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூடுதல் இடங்களை எதிர்பார்த்திருந்த காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும், தொகுதிகளை குறைக்கும் திட்டத்தில் திமுக இருப்பது, அக்கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி
பெரம்பூரில் போட்டியிடுகிறாரா விஜய்?.. தவெக நிர்வாகிகள் சூசகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com