MYTVK செயலி
MYTVK செயலிpt

“1967, 1977 போல 2026-ம்... இதுக்குமேல என்ன வேணும்?” - தவெக தலைவர் விஜய்

தவெக கட்சியில் இணைய உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியான MYTVK செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து துவங்கி வைத்திருக்கிறார்.
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும்நிலையில், திமுக, அதிமுக, விசிக, பாஜக, நாதக என அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான தீவிர பணிகளை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், தவெகவும் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளது.

MYTVK செயலி
மராத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: மஹாராஷ்டிரா அரசின் புதிய திட்டம்!

இதற்காக கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் எண்ணிக்கையை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இந்தவகையில், தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.

கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கப்பட்டது. பின்னர் தலைவர் விஜய் whatsapp ,instagram ,telegram உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்தினார். இந்தநிலையில், தவெக கட்சியில் இணைய உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியான MY TVK செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து துவங்கி வைத்திருக்கிறார். தொடர்ந்து, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை இயக்கத்தையும் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தவெக கட்சியின் பொது செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முக்கிய அம்சங்கள்: தவெக உறுப்பினர் சேர்க்கை, 2 கோடி குடும்பங்கள் உறுப்பினர் சேர்க்கையை இலக்கு, OTP கேட்காத வகையில் MY TVK செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய அவர், " இதற்கு முன்பு நமது தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய தேர்தல்கள் 1967, 1977. அதுபோல 2026ம் அமைய போகிறது. என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதை சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிப்பெற்றவர்களின் அதிகார பலம்,அசுர பலம் என அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் வென்றதற்கான காரணம் மிக எளிமையானதுதான். ஊருக்கு ஊர் , வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என அனைத்து மக்களையும் சந்தித்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைதான் நான் திரும்ப கூற ஆசைப்படுகிறேன்.

”மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள் , மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு.”

MYTVK செயலி
AI-ஆல் வங்கிகளுக்கு பாதிப்பு? ”இனி இதை மட்டும் செய்யாதீங்க!” - OpenAI CEO சாம் ஆல்ட்மன் வார்னிங்

இதை சரியாக செய்தாலே போதும், ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்பதன் அடிப்படையில் எல்லா குடும்பங்களையும் உறுப்பினராக சேர்த்து நம்மால் ஜெயிக்க முடியும். அதற்காகதான் இந்த ஆப். இதன்பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களோடுதான் இருக்கப்போகிறோம். அதற்காக இப்போதிலிருந்து தொடங்குவோம். நம்மோடு மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.” என்று பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com